Pudukkottai plane Accident | சாலையில் தரையிறங்கிய விமானம்புதுக்கோட்டையில் பரபரப்பு விமானி பகீர்
திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக பயிற்சி விமானம் திடீர் என தரையிரங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று பிற்பகல் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக சிறிய ரக போர் விமானம் தரை இறக்கப்பட்டது.இதனால் அந்த பகுதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு பயிற்சிக்காக இன்று பிற்பகல் ஒரு சிரிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே அந்த விமானம் சென்றபோது திடீர் என்று அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சாதூர்யமாக செயல்பட்ட விமானிகள் அவச அவசரமாக விமானத்தை சாலையில் தரை இறக்கினர். இருப்பினும் விமனத்தை ஓட்டிய விமானிகளுக்கு சேலாசக காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒன்று கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விமானம் தரை இறங்கியது குறித்து விமானிகளிடம் விசாரனை நடத்தினர். முதற்கட்ட விசாரனையில் விமானத்தின் ஒரு பகுதி இறக்கை உடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்படதாக சொல்லப்படுகிறது.மேலும் தரையிறங்கப்பட்ட விமானத்தை பொதுமக்கள்:ஒன்று கூடி தள்ளி சாலையோறத்தில் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.





















