(Source: ECI/ABP News/ABP Majha)
Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த ஆண்மிக சொற்பொழிவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலே பாபா என்ற ஆன்மிக சொற்பொழிவாளர் நடத்திய பிராத்தனை கூட்டம் இன்று ஹத்ராஸ் மாவட்டம் ரதி பன்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் போலே பாபாவின் பக்தர்கள் அமர்ந்து சொற்பொழிவை கேட்பதற்காக டெண்ட் அமைக்கபட்டிருந்தது. ஆனால் குறைந்த இடத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடியதால், சொற்பொழிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே, அதில் பங்கேற்ற பலருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டுள்ளது.
கடுமையான் வெப்பம் நிலவியதால், சிலர் அங்கேயே மயங்கி விழும் நிலைக்கு சென்றுள்ளனர், இதனால் பதற்றமான பக்தர்கள் போலே பாபா பேசி முடித்ததும் உடனே அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் பதறி ஓடி வெளியேற முயன்றதால் அங்கே நிலைமை மோசமாகியுள்ளது, கூட்டத்தில் சிக்கிய பலர் நசிங்கியும், மூச்சு விட முடியாமல் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
தற்போது வரை இந்த சோக நிகழ்வில் 120 நபர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் சொல்கின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என்று அங்கிருந்து வர கூடிய செய்திகள் சொல்கின்றன.
இந்த சம்பவம் அறிந்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஆதித்யநாத், இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைமை இயக்குநரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.