மேலும் அறிய

TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?

கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளாததன் பின்னணியில் தவெக காங்கிரஸ் இடையே இருக்கும் மனக்கசப்பு தான் காரணம் என பேச்சு அடிபடுகிறது. விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிலேயே ராகுல்காந்திக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என கடுப்பானதாக கூறப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க எம்.எல்.ஏக்களின் ஆதரவை நாடி இருந்தபோது, முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டியது காங்கிரஸ். அதுவும் பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்த நிலையில், அந்த கூட்டணியை உடைத்துவிட்டு த.வெ.க-விற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அதன்பின்னர், முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவிற்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.

சென்னை வந்த அவர், தனியார் ஹோட்டலில் தங்கி, விழாவிற்கு கிளம்ப ஆயத்தமானபோதுதான் தெரிந்தது. ராகுல் காந்திக்கு விழா மேடையில் சீட் போடவில்லை என்பது. விஜய்க்கு ஆதரவாக டெல்லியில் இருந்து கிளம்பிவந்திருக்கும் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என தொடக்கத்திலேயே ராகுல்காந்தி கோபப்பட்டதாக சொல்கின்றனர். உடனடியாக, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் த.வெ.க நிர்வாகிகளை அழைத்து கடுமையான குரலில் சொன்னபின்னரே, விழா மேடையில் விஜய்க்கு அருகில் ராகுல்காந்திக்கு சீட் கொடுக்கப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது. 

அதோடு, தேசிய அளவில் முக்கியத் தலைவரான ராகுலிடம், அமைச்சராக பதவியேற்ற சீனியரான செங்கோட்டையன் உட்பட யாருமே அவரிடம் குறைந்தப்பட்சம் கைக்கொடுத்துக் கூட வாழ்த்து பெறவில்லை. இது ராகுலை மட்டுமின்றி, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, வி.ஐ.பி வரிசையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கென முறையாக இடம் ஒதுக்கப்படவில்லை. விழாவிற்கு வந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர், உடனடியாக கிடைத்த இருக்கையில் சென்று விழா மேடைக்குக் கீழே அமர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அமரக் கூட சீட் கிடைக்கவில்லை. அவர்களை அழைத்து, இருக்கையை ஒதுக்கீடு செய்து அமர வைக்கக் கூட த.வெ.க தரப்பில் யாரும் முன்வரவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கடுப்பானதாக சொல்கின்றனர்.

விழா முடிந்ததும் ராகுல்காந்தி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரிடம் கடுமையாக பேசியிருக்கிறார். தனக்கான சரியான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகளுடன் பேசி ஏற்பாடு செய்யக் கூட தெரியாது என்று அவர் கோபித்துக்கொண்டதாகவும், அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு சென்ற ராகுல்காந்திக்கு உரிய ஏற்பாடுகளை முறையாக செய்யாததும் அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டுச் சென்றிருக்கிறது.

அதன்பின்னர் டெல்லி கிளம்பிச் சென்ற ராகுல்காந்தியை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அங்கு சென்று சந்தித்துள்ளனர். அப்போது. திமுக ஆட்சியில் இருந்ததுபோல த.வெ.க. ஆட்சியில் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் நம்முடைய தனிப்பட்ட கொள்கைகளிலும் அடையாளங்களிலும் இனி சமரசம் செய்துகொள்ள கூடாது எனவும்  திட்டவட்டமாக ராகுல் தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில், த.வெ.க ஆட்சிக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதும், அதிமுக தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சென்று சந்தித்ததும் ராகுல்காந்திக்கு பிடிக்கவில்லை. அதோடு, முதன்முதலாக த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாகவும் இதுவரையில் முதல்வர் விஜய் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் ராகுல்காந்தியை அப்செட் ஆக்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வி.டி.சுதீசன் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவுக்கு முதலமைச்சர் விஜய் செல்லவில்லை. இப்போது கேரளா சென்றால், அங்கு ராகுல்காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்து  பேசும்போது, அதிமுக ஆதரவு தொடர்பான விஷயங்களும், அமைச்சரவை குறித்தும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாலேயே முதல்வர் விஜய், தன்னுடைய கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை முதலில் சந்திப்பதே அரசியல் மரபாக இருக்கும் நிலையில், அதற்காகவும் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் வெதர் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் வெதர் அலர்ட்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
நடுவழியில் பரபரப்பு! அதிரடிப்படை வாகனத்தில் உதயநிதி: தடுத்து நிறுத்திய போலீஸ், ஒலக்கூர் காவல் நிலையத்தில் நடந்து என்ன?
நடுவழியில் பரபரப்பு! அதிரடிப்படை வாகனத்தில் உதயநிதி: தடுத்து நிறுத்திய போலீஸ், ஒலக்கூர் காவல் நிலையத்தில் நடந்து என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget