TVK Joins NDA Alliance | பாஜக கூட்டணியில் விஜய்?அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்! குஷியில் எடப்பாடி பழனிசாமி!
கரூர் சம்பவத்தை வைத்து தவெக தலைவர் விஜய்-யை கூட்டணிக்கு கொண்டுவர காய் நகர்த்தும் டெல்லி பாஜக! இதனால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசியல் களம்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கரூர் போலீஸார். இந்த நிலையில் நேற்று கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக எஸ்.பி. விசாரணை நடத்தினர். இந்தநிலையில் அவருக்கு அக்டோபர் 14ஆம் தேதி வரை நிதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது இந்த நடவடிக்கை தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை கேட்கின்றனர்.
கரூர் சம்பவம் நடந்த பிறகு ஒருபுறம் தவெகவினர் மீது சட்ட நடவடிக்கைகளை தீவிரம் காட்டியது தமிழக அரசு. மற்றோரு புறம் மத்திய அரசு விஜய்-க்கு ஆதரவான நடவடிகையில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விஜய்-யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் போலீஸார் தங்களது கடமையை சரியாக செய்ய வில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சரி, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி ஒரேமாதியான குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதேபோல் பிரச்சாரக்கூட்டத்தில் திடீரென பவர் கட் ஆனது எப்படி என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் அன்புமணி ராமதாஸூம் இவ்வளவு கூட்டம் வரும் என்று உங்களுக்கு தெரியாதா? எதற்கு தமிழக உளவுத்துறை இருக்கிறது என்று கடுமையாக சாடி இருந்தார்.
இப்படி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
கரூர் பிரச்சனை ஆரம்பித்த அடுத்த நொடியில் இருந்தே தனது உள்துறை மூலம் கரூர் நிலவரத்தை விசாரித்து சொல்ல உத்தரவு விட்டாராம் அமித்ஷா. மேலும் கட்சி சார்பாக ஹேமாமாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்து கரூரில் விசாரணை செய்து ரிப்போர்ட் செய்யவும் உத்தரவு விட்டு இருக்கிறார் அமித்ஷா.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியவை தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தேர்தல் களத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் மற்றோரு புறம் அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக இல்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் தவெகவை கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும். ஆனால் விஜய்-யோ கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று மேடைக்கு மேடை கருத்து தெரிவித்து வந்தார் இந்தநிலையில் தான் கரூர் சம்பவத்தால் விஜய் தனது கூட்டணி தொடர்பான நிலைபாட்டை மாற்றிக்கொள்ள முடிவு எடுத்து விட்டதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதாவது திமுகவை வீழ்த்த அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படிபட்ட சூழ்நிலையில் விஜய்-யை வலைக்க மற்றொரு புறம் காங்கிரஸூம் தீவிரமாக வலைவீசி வருகிறதாம். அதாவது கரூர் சம்பவம் நடந்த பிறகு விஜய்க்கு நேரடியாகவே போன் செய்து பேசி ஆறுதல் தெரிவித்து உள்ளார் எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி.
இந்தநிலையில்தான் கரூர் சம்பவம் தொடர்பாக வாய்திறக்காமல் இருந்து வந்த விஜய் தனக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிதலைவர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் தனது அரசியல் பயணம் தொடரும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.





















