VCK ADMK Alliance : அதிமுகவை அழைத்த திருமா!உதயநிதி பதிலடி!நீடிக்குமா கூட்டணி?
விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவுக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருமா என்ற பரபரப்பை கூட்டியுள்ளது.
சில நாட்களாகவே திமுக மீது அதன் கூட்டணி அட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளனர். அதற்கேற்றார் போல் கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் திமுக அரசுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து நேரடியாகவே எதிர்ப்பை காட்டினர்.
அதே நேரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும் சில நாட்களாகவே திமுக மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்பட்டது.
மாநில அரசுக்கு அதிகாரம் வந்தால் எந்த சூழலிலும் ஒரு தலித் முதல்வராக முடியாது என பேசியது சர்ச்சையானது.முன்னதாக, விழுப்புரம் கள்ளச்சாராயம் விவகாரத்தின் போதும் ஆளும் கட்சியை கூட்டணி கட்சி என்றும் பாராமல் கடுமையாக சாடியிருந்தார் திருமா..திருமாவுக்கு ஏற்கனவே வேங்கைவயல் விவகாரத்தில் இருந்தே திமுக மீது அதிருப்தி இருப்பதாகவும், இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் தற்போது இடஒதுக்கீடு வரை அவர் திமுகவுக்கு எதிரான நிலைப்பாடையே எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமியும் காத்திருப்பதாக பேசப்பட்டது. எனவே திமுக கூட்டணி கட்சிகளை வலைவீசி தன்பக்கம் இழுக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. கூட்டணி இன்றி வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது கடினம் என்பதை அறிந்த எடப்பாடி இத்தகைய முடிவை கையில் எடுத்துள்ளாராம்.
இந்நிலையில் இன்று திருமாவளவன் அதிமுகவுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து அதிரடி காட்டியுள்ளார். பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி திருமாவளவன் பல நாட்களாக போராடி வருகிறார். இந்நிலையில் விசிக சார்பில் நடக்கும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார் திருமா..மேலும் பேசிய அவர்,
மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட அரசு முன் வர வேண்டும் என கூறியுள்ளார்.
இதுவெறும் மாநாட்டுக்காக விடுத்த அழைப்பு என்றாலும் கூட்டணி கட்சிக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டில் எதிர்க்கட்சியுடன் ஒன்றினைந்து போராட விசிக தயார் என்பதை சூசகமாக கூறிவிட்டார் திருமாவளவன்.
எனவே வரும் 2026 சட்டமன்ற தேர்தல் அமைச்சர் கே என் நேரு பேசியது போலவே திமுகவுக்கு அத்தனை சுலபமாக இருக்கப்போவதில்லை என்பதை நிரூபணம் செய்துவிட்டது.