மேலும் அறிய

Sunetra Pawar Deputy CM Dy CM ஆன அஜித் பவார் WIFE சரத் பவாருக்கு ஆப்பு BJP மாஸ்டர் PLAN | BJP |NCP

அஜித் பவார் மறைவுக்குப் பின்னர் கட்சியைக் கைப்பற்ற நினைத்த சரத் பவார்... உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைத்த பாஜக... மாநிலத்தின் முதல் பெண் துணை முதலமைச்சராக அஜித் பவாரின் மனைவி நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா துணை முதல்வர்களில் ஒருவரான அஜித் பவார் ஜனவரி 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸில் தனது அரசியல் கரியரைத் தொடங்கி, பின்னர் தனது சித்தப்பாவான சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அஜித் பவார், கடந்த 2023-ல் கட்சியை உடைத்து பாஜக-வுடன் கூட்டணி துணை முதலமைச்சரானார். அதோடு, தேசியவாத கட்சியும் சின்னமும் அஜித் பவார் வசம் வந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து அஜித் பவார் 6-வது முறையாக துணை முதலமைச்சரானார். ஆனால், இந்த இடத்தில்தான் திடீர் ட்விஸ்ட்டாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தலில் 2 மாநகராட்சிகளில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன.

அந்த இரண்டு மாநகராட்சியிலும் இந்தக் கூட்டணி படுதோல்வியடைந்தாலும், அஜித் பவாரும் சரத் பவாரும் கைகோர்த்தது பாஜக-வின் கண்ணை உறுத்தியது. இன்னும் சொல்லப்போனால், சரத் பவார் தலைமையில் இயங்கிவந்த தேசிய காங்கிரஸை தனது தலைமையில் தன்னுடைய தேசிய காங்கிரஸுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார்.

இரண்டு தேசியவாத காங்கிரஸும் பிப்ரவரியில் இணையத் திட்டமிடப்பட்டிருந்தாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டன. தனது அரசியல் கரியர் முழுவதும் இரண்டாம் கட்ட தலைவராகவே இருந்த அஜித் பவார், முதலமைச்சர் நாற்காலியை தனது அடுத்தகட்ட இலக்காகத்தான் இப்படியொரு முடிவுக்கு நகர நினைத்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்தான் எதிர்பாராத விதமாக விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். அதனால், தேசியவாத காங்கிரஸுக்கு தலைமையேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதேவேளையில், அஜித் பவாரின் வெற்றிடத்தைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரஸை சரத் பவார் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவாரோ என்று கட்சியின் சீனியர்கள் அச்சப்பட்டனர்.

தேசியவாத காங்கிரஸ் மீண்டும் சரத் பவார் வசம் செல்வதை பாஜக-வும் விரும்பவில்லை. ஏனெனில் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கைக்குச் சென்றுவிட்டால் தனது கூட்டணியில் அக்கட்சி இருக்காது என்பதையும், தேசியவாத காங்கிரஸின் 40 எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கூட்டணியில் அடிபடும் என்பதையும் பாஜக உணர்ந்தது.

அதற்கேற்றாற்போலவே, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர். எக்காரணம் கொண்டும், சரத் பவார் வசம் கட்சி சென்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த பாஜக இந்தச் சூழ்நிலையிலைப் பயன்படுத்தி, அஜித் பவாரின் மனைவியை அவசர அவசரமாக துணை முதல்வராக்க வைத்திருக்கிறது.

அதன்படி, அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸின் சட்டமன்றத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று மாலை மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார்.

கட்சி தன்வசம் வரும் என்று சரத் பவார் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் வழக்கம்போல உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்து தனது கூட்டணி முறிவை தடுத்திருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget