Rowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!
நவீன கை துப்பாக்கிகளுடன், ஹைடெக் ஆக டெக்னாலஜியை யூஸ் செய்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சீசிங் ராஜாவை என்கவுண்டர் முறையில் வீழ்த்தி இருக்கிறது காவல்துறை. சாதாரண லோன் ஏஜென்ட் நிறுவனங்களுக்கு உதவியாளராக இருந்த செங்கல்பட்டு ராஜா எப்படி சீசிங் ராஜாவாக மாறினார்.. வாருங்கள் பார்க்கலாம்..
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஆரம்ப காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு வட்டி தொகையை சரியாக செலுத்தாதவர்களின் வாகனங்களை பறித்து நிறுவனங்களிடம் கொடுத்து வந்துள்ளார் ராஜா.
இதுவே நாளடைவில் ராஜாவிடம் சொன்னால் போதும் பா எப்படியாவது பொருள் வந்து சேர்ந்திடும் என்று அவருக்கான இமேஜை உருவாக்க, சாதாரண ராஜா சீசிங் ராஜாவாக மாறினார்..
வாகனங்களை சீஸ் செய்வது மட்டுமில்லாமல், அவ்வப்போது பண தேவைக்காக வழிப்பறி செய்வது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் சிசிங் ராஜா. இதன் காரணமாக அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட, சிசிங் ராஜாவின் ரவுடி நட்பு வட்டாரம் விரிவடைந்துள்ளது.
இதனால் தனக்கென்று ஒரு தீமை உருவாக்கிய சீசிங் ராஜா, நாளடைவில் தொழிலதிபர்களை கடத்துவது மிரட்டுவது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து என அவரின் குற்ற கிராப் எகிறி உள்ளது. இதனால் சென்னையில் படிப்படியாக வளர்ந்த சீசிங் ராஜா ஏ ப்ளஸ் கேட்டகிரி குற்றவாளியாக உருவெடுத்தார்.
ஒரு பக்கம் க்ரைம் ரேட் எகிறிக்கொண்டே போக, சென்னையில் பிரபல தாதாக்களின் அறிமுகமும் சீசிங் ராஜாவுக்கு ஏர்ப்பட்டுள்ளது. அதில் தான் ஆற்காடு சுரேஷ் கேங்கிள் இணைகிறார் சீசிங் ராஜா. குறிப்பாக வடசென்னையின் பெண் தாதா அஞ்சலையை ஆற்காடு சுரேஷ் விரும்பினார், அதற்கு இடையூறாக இருந்த மற்றொரு ரவுடி சின்னா நீதிமன்ற வாசலிலேயே தீர்த்து கட்டப்பட்டார். அதில் ஆற்காடு சுரேஷுக்கு உதவியது சீசிங் ராஜா தான் என்று சொல்லப்படுகிறது.
மேலும் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு ஆப்போசிட் கேங்காக வலம் வந்தது சீசிங் ராஜா கேங், இவர்களிடையான கேங் வாரில் ஐந்து ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு பல்வேறு கொலை சம்பவங்களிலும் சீசிங் ராஜாவுக்கு தொடர்பு ஏற்பட, ஹைடெக் ரவுடியாக மாறினார் சிசிங் ராஜா. மார்க்கெட்டில் வரும் நவீன கை துப்பாக்கிகளை முதலில் டெஸ்ட் செய்து பார்ப்பது சீசிங் ராஜா தான். சீசிங் ராஜா ஒரு இடத்தில் இருந்தால், நிச்சயம் அவரது கையில் துப்பாக்கி இருக்கும்.
இதனால் தாம்பரம் சிட்லபாக்கம் கூடுவாஞ்சேரி சேலையூர் செங்கல்பட்டு புளியந்தோப்பு ராஜமங்கலம் தென் சென்னை பகுதிகள் என இவர் மீது கொலை கொலை முயற்சி, ஆக்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என வழக்குகள் இல்லாத காவல் நிலையங்களை இல்லை என்ற நிலை உருவானது.
இதுவரை ஐந்து கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் சீசிங் ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் ஏழு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு சிறைகள் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை காவல்துறையினர் நெருங்கி வருவதை உணர்ந்த சீசிங் ராஜா கடந்த சில ஆண்டுகளாகவே, நேரடியாக ஸ்பாடுக்கு செல்லாமல் தொலைபேசி மூலமாக மிரட்டுவது.. தன்னைக் கண்டுபிடிக்காமல் இருக்க whatsapp கால், மற்றும் வெளிநாட்டு ஆப் சிலவற்றை பயன்படுத்தி, இருந்த இடத்திலிருந்து காரியங்களை சாதித்து வந்துள்ளார்..
இந்நிலையில் தான் ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை வழி நடத்தியதில் சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதனால் காவல் துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்து ஆந்திராவுக்கு தப்பி ஓடினார் சிசிங் ராஜா. அங்கே ராஜமுந்திரியில் தன்னுடைய இரண்டாவது மனைவியின் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு மாதம் முன்பே தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். ஆனால் இறுதி நிமிடத்தில் நூல் இலையில் சீசிங் ராஜா தப்பி விட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் தான் ஆந்திராவில் கடப்பாவில் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்த சீசிங் ராஜாவை நேற்று கைது செய்தனர் தனிப்படை காவல்துறையினர். அதைத்தொடர்ந்து அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட போது, இசிஆரிலுள்ள அக்கறை அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதை அறிந்த போலீஸ் அதை பறிமுதல் செய்வதற்காக அங்கே அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது காவல்துறையின் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி விட்டு தப்பும் என்ற வீசிங் ராஜாவை என்கவுண்டர் முறையில் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.