Rahul Gandhi Video | டெம்போவில் பயணித்த ராகுல் இளைஞர்களுடன் COOL RIDE வைரலாகும் வீடியோ
அக்னிபத் திட்டத்தின் மூலம் நமது நாட்டு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் இழைத்துள்ளதாக ராகுல் காந்தியை குற்றம் சாட்டியுள்ளார்.
இளைஞர்களுடன் சேர்ந்து தான் பயணித்த வீடியோ ஒன்றை x வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அப்போது ராகுல் காந்தியுடன் உரையாற்றிய அந்த இளைஞர்கள் தாங்கள் ராணுவத்தில் இணைய விரும்பியதாகவும் அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் ராணுவத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த வீடியோவுடன் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், 'தேசபக்தியின் டெம்போ'வில் சவாரி செய்யும் போது, இளைஞர்களின் வலியை நன்றாகப் புரிந்துகொண்டேன். இராணுவத்தில் இணைந்து நமது நாட்டிற்கு சேவை புரிய வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார். ராணுவம் மற்றும் இளைஞர்கள் மீது 'அக்னிபத் யோஜனா' என்ற திட்டத்தை வலுக்கட்டாயமாக திணித்துள்ளார். இந்த துணிச்சலான இளைஞர்களுக்கு இந்திய அரசில் நீதி கிடைக்கும்.
இளைஞர்களின் கனவுகள் கலைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் நமது வீரமிக்க இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தார்.