(Source: ECI/ABP News/ABP Majha)
Jammu Kashmir Cong.Manifesto : தள்ளி போய் விளையாடுங்க!காலரை தூக்கும் ராகுல்! காங்.வசமாகும் காஷ்மீர்!
ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வர முடியாது என்பதில் உறுதி கொண்டுள்ள பாஜக வெற்றிக்கான வேறொரு வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஐ ரத்து செய்தது மத்திய பாஜக அரசு தான். மேலும் நேரம் பார்த்து காய் நகர்த்திய காங்கிரஸும் மீண்டும் 370-வது பிரிவை அமல்படுத்துவோம்; மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதியை அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜம்மு மற்றும் ராஜோரியை புதிய சுற்றுலாதலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, "பயங்கரவாதம் நிறைந்திருந்த காஷ்மீரை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளோம். ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 என்பது வரலாறாக மாறிவிட்டது. அது ஒருபோதும் திருப்பி கொடுக்கப்படாது. சட்டப்பிரிவு 370 இளைஞர்கள் கையில் துப்பாக்கிகளையும் கற்களையும் மட்டுமே கொடுத்தது..என கூறியுள்ளார்.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 47 இடங்கள் காஷ்மீரிலும், 43 இடங்கள் ஜம்முவிலும் உள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் 30 தொகுதிகளிலும் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பாஜக. அதுவும் குறிப்பாக ராஜேரியை ரேடாரில் வைத்துள்ளது.மேலும்
காஷ்மீரை பொறுத்தவரை, பள்ளத்தாக்கில் உள்ள 25 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த தேர்தல் பாஜக மற்றும் ஐஎண்டிஐஏ கூட்டணிக்கு பெரும் சவாலான தேர்தலாக கருதப்படுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் ஐஎண்டிஐஏ க்கு சாதகமாக உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.