Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!
தனது மனைவிக்கு நடந்த பிரசவத்தை வீடியோவாக பதிவு செய்து சர்ச்சையில் சிக்கிய யூடியுபர் இர்பான் இந்த விவகாரம் குறித்து விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே யூடியூபர் இர்ஃபான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தையின் பாலினத்தை பிறக்கும் முன்பே வெளியிட்டு பல சிக்கல்களில் சிக்கினர். இதற்காக மன்னிப்பு கடிதத்தை இர்பான் எழுதிய பிறகே அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை கைவிட்டது.
இந்த நிலையில் தனது மனைவிக்கு குழந்தை பிறந்த போது இர்ஃபானும் தனது மனைவியின் பிரசவ அறையில் உள்ளே இருந்துள்ளார். தாயின் உடலில் இருந்து குழந்தையை பிரிக்கும் நிகழ்வாக மருத்துவர்கள் தொப்புள் கொடியை வெட்டுவர். ஆனால் இங்கு இர்பானே தனது மனைவியின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் யூடிபர் இர்பான் மீதும் இந்த வீடியோவை பதிவு செய்ய அனுமதித்த மருத்துவமனை மற்றும் பணியாளர்கள் மீது மருத்துவ துறை சார்பில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
மேலும் இர்பானின் வீடியோவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து தற்போது நிக்கினார்.காவல்துறையும் தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனு அவரது செயல் மன்னிக்க முடியாதுய் என்று கூறியுள்ள நிலையில் யூடியுபர் இர்பானுக்கு பெரிய சிக்கலை தற்போது ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து யூடியூபர் இர்ஃபான் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். 'எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை; மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்' என தெரிவித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராமமூர்த்தியிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்ஃபான் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள்