மேலும் அறிய

CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடி

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக  மாநிலங்களவை எம்.பி தம்பிதுரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகமும் சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி, பாஜக தலைவர் மாற்றும் மற்றும் வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பக பேசியதாக சொல்லப்படுகிறது.

அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைத்து 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 ஆம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டி போட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் 20 தொகுதிகளாவது வென்றிருக்கலாம் என்று அதிமுக - பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் புலம்பியதாக செய்திகள் வெளியானது.

இதை போன்று கூட்டணி அமைக்காமல் பிரிந்து இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கே சாதகமாக அமையும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுவருகிறார். அதோடு ஓபிஎஸ், தினகரனையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அமித்ஷா இபிஎஸ்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.

இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனும் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இந்த ஆலோசனை போது கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோல், தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என்ற முக்கிய கன்டிசனையும் இபிஎஸ் போட்டதாக கூறப்பட்டது. ஒருபுறம் நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக்க வேண்டும் என்று அதிமுக விருப்பம் தெரிவித்து வருவதாகவும் மறுபுறம் அண்ணாமலையோ கருப்பு முருகானந்தத்தை தமிழக பாஜக தலைவராக அறிவிக்க வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்து பேசியுள்ளார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகம் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புறம் கூட்டணி, பாஜக தலைவர் மாற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டாலும் வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.  வக்பு வாரிய மசோதா மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோத தொடர்பான ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-யின் அறிவுரைப்படி அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வோம் என்று மத்திய அமைச்சர்களிடம் இருவரும் உறுதியளித்ததாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதேபோல், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிரான பேட்ச்சை அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று அணிய மறுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget