Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி Pressmeet
4000 சதுர கீலோமீட்டர் பகுதியை சீன ஆக்கிரமித்திருப்பதை உங்கள் நாட்டின் பிரதமர் சரியாக கையாள்வதாக சொன்னால் எந்த விதத்தில் அது சரியாக இருக்கும் என்று அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடியை விமர்சனம் செய்துள்ளது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவரிடம் அமெரிக்கா மற்றும் சீனா போட்டியை பிரதமர் மோடி எவ்வாறு கையாண்டுள்ளார் என்று ராகுலிடம்என்று அவரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராகுல், எங்கள் நாட்டில் 4000 சதுர கீலோ மீட்டர் பகுதியை சீனா படைகள் ஆக்கிரமைப்பு செய்ததை எங்கள் நாட்டின் பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக சொன்னால் எப்படி சரியாகும். டெல்லியில் உள்ள நில பரப்பை போல லடாக்கில் சீனப் படைகள் ஆக்கிரமித்திருக்கிறது. இது ஒரு பேரழிவுக்கு சமமாகும். இதைப் பற்றி எங்கள் நாட்டு ஊடகங்கள் இது வரை வாய் திறக்கவில்லை
இதேப் போல அமெரிக்காவின் 4000 சதுர கிமீ நிலத்தை உங்கள் அண்டை நாடு ஆக்கிரமித்து அதனை உங்கள் அதிபர் சிறப்பாக கையாண்டதாக கூறினால் அது எப்படி இருக்கும்? எனவே சீனா விவ்காரத்தை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக எனக்கு தெரியவில்லை என்று ராகுல் பேசியிருந்தார்
அமெரிக்காவில் ராகுல் காந்தியின் இந்த பேச்சு பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. அதேப் போல இந்திய குறித்து அவர் சர்வதேச அரங்கில் இவ்வாறு பேசியுள்ளது இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.





















