மேலும் அறிய

விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! வறட்சியைச் சமாளிக்க பிபிஎப்எம் கரைசல் தெளிக்க அறிவுரை!

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் இயல்பான மழையளவை விட 330 மி.மீ. மழை குறைவாகப் பதிவாகியுள்ளது. இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6,400 ஹெக்டேர் நெல் சாகுபடி குறைந்துள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள மழை பற்றாக்குறையால் நெல், உளுந்து, பாசிப்பயறு மற்றும் மணிலா உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாத்து மகசூல் இழப்பைத் தவிர்க்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அ.சித்ரா அறிவுறுத்தியுள்ளார்.

மழை பற்றாக்குறையால் குறைந்த நெல் சாகுபடி!

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 43,906 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததால், அக்டோபர் மாதம் வரை இயல்பான மழையளவை விட சுமார் 330 மில்லி மீட்டர் மழை குறைவாகப் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் சுமார் 6,400 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி குறைந்துள்ளது. மழை பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், தற்போது கார்த்திகை, மார்கழி பட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு மற்றும் மணிலா உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பயிர்களையும் வறட்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பயிர்களைக் காக்க பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் கரைசல்!

பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியைச் சமாளித்து பயிர்களின் வளர்ச்சியைப் பாதுகாக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள பிங்க் பிக்மென்டட் ஃபேக்கல்டேட்டிவ் மெத்திலோட்ரோப்ஸ் (Pink Pigmented Facultative Methylotrophs - PPFM) எனப்படும் திரவ நுண்ணுயிர் கரைசலை இலைவழியாகத் தெளிக்கலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது. இந்தக் கரைசலைப் பயன்படுத்தும் முறை குறித்து வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:

பிபிஎப்எம் தெளிக்கும் முறை:

ஒரு ஏக்கருக்கு 200 முதல் 500 மில்லி பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் இலைகள் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மாற்றாக, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற அளவிலும் கலந்து பயன்படுத்தலாம்.

இந்த நுண்ணுயிர் கரைசல் பயிர்களின் இலைகளில் உள்ள பச்சையத்தைப் பாதுகாத்து, பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அடுத்த மழை பெய்யும் வரை சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை நெல், பயறு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளர உதவும்.

இந்தக் கரைசலை காலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே தெளிக்க வேண்டும். மேலும், இதனுடன் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலந்து தெளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை பொட்டாஷ் கரைசல் தெளிப்பதன் மூலம் வறட்சியைத் தவிர்க்கலாம்!

பிபிஎப்எம் கரைசலுக்கு மாற்றாக வெள்ளை பொட்டாஷ் கரைசலையும் இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்தலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வெள்ளை பொட்டாஷ் (KCl) என்ற அளவில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான மொத்தம் 200 லிட்டர் கரைசலை கைத்தெளிப்பான் மூலம் பயிர்களின் இலைகள் முழுமையாக நனையும்படி தெளிக்க வேண்டும்.

இந்தத் தெளிப்புப் பணியை காலை அல்லது மாலை நேரங்களில் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தெளிக்கும்போது மண்ணில் 30 முதல் 40 சதவீதம் வரை ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிவப்பு பொட்டாஷ் பயன்படுத்தும் முறை!

மேலும், சிவப்பு பொட்டாஷ் எனப்படும் மியூரியேட் ஆஃப் பொட்டாஷையும் (Muriate of Potash) குறிப்பிட்ட முறையில் கரைசலாகத் தயாரித்து இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்தலாம். இதற்காக ஒரு கிலோ மியூரியேட் ஆஃப் பொட்டாஷை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைக்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு 1 முதல் 2 மணி நேர இடைவெளியிலும் கரைசலை நன்றாகக் கலக்க வேண்டும். இவ்வாறு குறைந்தது 8 மணி நேரம் வரை ஊறவைத்து, கரையாத துகள்கள் பாத்திரத்தின் அடிப்பகுதியில் படியுமாறு செய்ய வேண்டும்.

அதன்பிறகு, மேல்பகுதியில் இருக்கும் தெளிவான திரவத்தை மட்டும் தனியாகச் சேகரித்து, கைத்தெளிப்பான் மூலம் பயிர்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். கரையாத துகள்களைப் பயிர்களில் தெளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்!

வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தற்போதைய மழை பற்றாக்குறை சூழலில் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, பாசிப்பயறு மற்றும் மணிலா உள்ளிட்ட பயிர்களைப் பாதுகாத்து, மகசூல் இழப்பைத் தவிர்க்க விவசாயிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் கரைசல் மற்றும் வறட்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற விரும்பும் விவசாயிகள் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் அல்லது கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அணுகலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அ.சித்ரா வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாத்து, அதிக மகசூல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

குடித்தால் உயிர் பிழைக்கவே முடியாது... 17,000 உயிர்களைப் பறித்த ஆபத்தான மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை!
குடித்தால் உயிர் பிழைக்கவே முடியாது... 17,000 உயிர்களைப் பறித்த ஆபத்தான மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை!
கிராமப்புறப் பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க! இலவசமாக 5 ஆடுகள் தரும் தமிழ்நாடு அரசு - உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
கிராமப்புறப் பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க! இலவசமாக 5 ஆடுகள் தரும் தமிழ்நாடு அரசு - உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
குத்தகை விவசாயிகளுக்கு குட் நியூஸ்: ஆதார் OTP, Farmer ID இன்றி எளிதாகப் பயிர் காப்பீடு செய்யலாம்!
குத்தகை விவசாயிகளுக்கு குட் நியூஸ்: ஆதார் OTP, Farmer ID இன்றி எளிதாகப் பயிர் காப்பீடு செய்யலாம்!
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: நிவாரண தொகை தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு - என்ன தெரியுமா?
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: நிவாரண தொகை தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு - என்ன தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Embed widget