ADMK Protest : சொன்னீங்களே - செஞ்சீங்களா? தமிழ்நாடெங்கும் அதிமுக போராட்டம்
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளதை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக சார்பாக சுமார் 505 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதில் முக்கியமான அறிவிப்புகளை கூட செய்வோம் என அவர்கள் உறுதி தரவில்லை.





















