மேலும் அறிய

"எனக்கு எதுக்கு இத்தனை?" கான்வாயை cut செய்த மோடி! பின்னணியில் மெகா பிளான்

’’ரூல்ஸ் நமக்கு மட்டும்தானா இவரு ஃபாலோ பண்ணமாட்டாரா’’ என கேட்கும் நெட்டிசன்ஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துள்ளார் பிரதமர் மோடி. 

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடை காரணமாக, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி சில வேண்டுகோள்களை வெளியிட்டார். 

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.முடிந்தவரை மெட்ரோ இரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட 'work from home' முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பயணத்துக்கான எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தலாம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை (Foreign Exchange) பாதுகாப்பதற்காக, ஒரு வருடத்திற்கு ஆபரணத் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது (Destination Weddings) போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

அதிகப்படியாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்களான கான்வாயின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைத்து மாற்றத்தை தன்னிடம் இருந்து அமல்படுத்தத் தொடங்கியுள்ளார் மோடி.

இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு என்பது உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கமாக பிரதமரின் கான்வாயில் ஜாமர் வாகனங்கள், ஆம்புலன்ஸ் என சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்கும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாகக் குறைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

வாகன எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல், கான்வாயில் மின்சார வாகனங்களை (EV) அதிக அளவில் பயன்படுத்தவும் SPG-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்காகப் புதிய வாகனங்களை வாங்காமல் ஏற்கனவே உள்ள வளங்களைக் கொண்டே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 

பிரதமரின் இந்தச் சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் தங்கள் கான்வாய் வாகனங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். எனினும் பாதுகாப்பு விதிமுறைகளான 'புளூ புக்' விதிகளில் சமரசம் செய்யாமல் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு நிர்வாகத்தில் ஆடம்பரத்தைக் குறைத்து, இக்கட்டான சூழலில் தேசத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பிரதமரின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகப் பொருளாதாரம் சவாலான நிலையில் இருக்கும்போது, நாட்டின் முதல் குடிமகனான பிரதமர் முன்னின்று மேற்கொள்ளும் இத்தகைய மாற்றங்கள் சாமானிய மக்களிடையே ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
e-Sevai மூலம் தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெறுவது எப்படி? கடைசி நாள் & நிபந்தனைகள்!
e-Sevai மூலம் தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெறுவது எப்படி? கடைசி நாள் & நிபந்தனைகள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Embed widget