மேலும் அறிய

Muslim Pray in Temple | இதுதான் சார் தமிழ்நாடு! அம்மனுக்கு சாற்றிய மாலையை இஸ்லாமியருக்கு மரியாதை செய்த அர்ச்சகர் | Madurai | Tamil News

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பள்ளிவாசல் முன்பாக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள், இனிப்புகள் வழங்கிய நிலையில் பள்ளிவாசல் நிர்வாகிக்கு மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது கவனம் பெற்றுள்ளது. மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றதாக இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகின்றனர். 

இந்நிலையில் சுவாமியும் அம்மனும் தெற்குவாசல் பகுதியில் வீதி உலா வந்தபோது மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும், சிவாச்சாரியார்களுக்கு, குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். அப்போது வீதி உலாவின் போது பள்ளிவாசல் முன்பாக மீனாட்சிசுந்தரேஸ்வரர்  தங்க பல்லக்கு நிறுத்தப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை பள்ளிவாசல் நிர்வாகிக்கு மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்குவாசல் பகுதி பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்த இஸ்லாமியர்கள் வீதியின் இருபுறங்களிலும் நின்றபடி தங்கபல்லக்கில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியும் நேரில் பார்த்து ரசித்தனர். சாமி வேடமிட்டபடி வந்த குழந்தைகள் சிறுவர்களுககு அங்கு நின்றுகொண்டிருந்த இஸ்லாமிய சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வீதி உலா முன்பாக வந்து அவர்களுக்கு கைகொடுத்து வரவேற்றார். சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு குளிரபானங்கள் வழங்கியது குறித்து பள்ளிவாசல் நிர்வாகி கூறும்போது மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை தேடி அலைவது அரசுக்குத் தெரியவில்லையா? - தனியாரால் தவாக ஆவேசம்
தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை தேடி அலைவது அரசுக்குத் தெரியவில்லையா? - தனியாரால் தவாக ஆவேசம்
Iran Vs America: அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
“இதுதான் உங்கள் சமூக நீதியா?” - மின் கணக்கீட்டை தனியாரிடம் தாரைவார்க்கும் அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!
“இதுதான் உங்கள் சமூக நீதியா?” - மின் கணக்கீட்டை தனியாரிடம் தாரைவார்க்கும் அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்

Embed widget