Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதல், திருப்பத்தூரில் உலர் பழங்களை கொண்டு 200 கிலோ அளவிலான பிரம்மாண்ட லிக்வர் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது..
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஏஆர் தங்கக்கோட்டை தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லிக்வர் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17ம் நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டில் லிக்கர் கேக் அறிமுகம் ஆன நிலையில் இதனை பல்வேறு நாடுகளில் கடைப்பிடிப்பதாகவும் அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக உலர் பழங்கள் பயன்படுத்தி 200 கிலோ அளவிலான லிக்வர் கேக் தயாரிக்க திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஊறல் போட வேண்டும் என்பதால் தங்கக்கோட்டை ஹோட்டலில் உலர் பழங்கள் மற்றும் ஆல்கஹால் கொண்டு லிக்வர் கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கிரிவேலன்,
மற்றும் ஏலகிரி முக்கிய தொழில் அதிபர்கள் பண்டூரா பார்க் மற்றும் செல்பி பாண்ட மற்றும் தங்ககோட்டை ரெசார்ட் விருந்தினர்கள்,
பெண்கள், குழந்தைகள், வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஹோட்டல் பொது மேலாளர் சசிகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.





















