Weather Report : ’’தமிழகத்தில் புயல் அபாயம்?விண்ணை பிளக்கும் இடி மழை’’WEATHERMAN வார்னிங்
சென்னையில் இன்று இரவு பலத்த புயலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. இரு தினங்களுக்கு முன்னே தமிழகத்தில் இனி டமால் டுமீல் தான் என வெதர்மேன் வார்னிங் கொடுத்திருந்த நிலையில் அவர் சொன்னதை போலவே தற்போது பெருமழை பெய்ய தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மாலை 6 மணியே நன்கு இருட்டி இரவு போல் காட்சியளித்து வருகிறது. காலை மற்றும் நண்பகலில் சூரிய ஒளி மண்டையை பொளக்க இரவானால் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் இரவு முழுக்க மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை முதல் கனத்த மழை பல பகுதிகளில் கொட்டித் தீர்த்தது. தற்போது சிறிய இண்டர்வெல் விட்டுள்ள நிலையில், இரவில் புயல் அபாயம் இருப்பதாகவும் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பிரதீஒ ஜான் தனது த்ரெட்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே வேலை முடித்து செல்வோர் சீக்கிரமே வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து வெதர்மேன் பதிவிட்டுள்ளதாவது..சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும்.பிரகாசமான வெயிலை தொடர்ந்து புயல் வீசுவுள்ளது. கடல் காற்று வரவிருக்கும் புயல்களுடன் சரியாக தொடர்பு கொண்டு நகர்வதால், சென்னை நகரின் சில பகுதிகளில் குறுகிய மழை பெய்யும், இரவில் அதிக புயல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 நாட்கள் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது, இன்றும் அது தொடர்கிறது என கூறியுள்ளார்.
மேலும் மத்திய மாவட்டங்களான: ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கடலோரம்: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், பாண்டி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களிலும்
டெல்டா பெல்ட் பகுதிகளிலும் மீண்டும் ஒரு சுற்று நல்ல மழைக்கு எல்லாம் தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார்
தெற்கை பொறுத்தவ்ரை: மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளார் வெதர்மேன்





















