வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில் வெளியூரைச் சேர்ந்த தவெக-வினர் டோக்கன் விநோயோகம் செய்வதாக அதிமுக-வினர் அவர்களை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப்பு போட்டி இருப்பதால் யாருக்கு வெற்றி பெறுவார் என தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், தாராபுரம் தொகுதி வீராச்சிமங்கலத்தில் கன்னிமார் கோவில் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த தவெக-வினர் சுற்றித் திரிவதாக அதிமுகவினர் அவர்களை சுற்றிவளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தவெக-வினர் காரில் டோக்கனுடன் சுற்றித்திரிவதாக குற்றம்சாட்டிய அதிமுகவினர், "ஆளுங்கட்சி அராஜகம் தாங்க முடியல. ரோட்ல வரவங்க போறவங்களுக்கெல்லாம் டோக்கன் கொடுக்குறாங்க. ஆளுங்கட்சினா என்னவேனா பண்ணலாமா" என ஆவேசமாகக் கேள்வியெழுப்பினர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















