Naveen Patnaik vs Modi : மோடி பக்கா ஸ்கெட்ச்..நவீனுக்கு முற்றுப்புள்ளி!உதவிய VK பாண்டியன்?
24 ஆண்டுகளாக ஒடிஷாவை தன் கட்டுக்குள் வைத்திருந்த நவீன் பட்நாயக்கின் அரசியல் சாம்ராஜ்யத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது அர்சியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது…இத்தனை காலமாக நவீன் பட்நாயக்கை தேர்ந்தெடுத்த ஒரிஷா மக்கள் இந்த தேர்தலில் அவரை கைவிட்டது ஏன்… ஒட்டுமொத்தமாக மோடி பக்கம் சென்றதுக்கான காரணம் என்ன எனபதை பார்க்கலாம்..
கடந்த 24 வருடங்களாக ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது.. 5 முறை முதல்வராக பதவி வகித்து வந்த நவீன் இந்த முறை முதல்வராகியிருந்தால் இந்திய வரலாற்றில் அதிக காலம் முதல்வராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்திருப்பார்.. ஆனால் அந்த நேரத்தில் நவீனுக்கு மிகப்பெரிய ஷாக்கை கொடுத்துள்ளனர் ஒரிஷா மக்கள்..
இந்த முறை ஒரிஷாவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.. சட்டசபை தேர்தலில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்பையுடன் ஒடிஷாவை கைப்பற்றியுள்ளது.. 24 ஆண்டுகளாக ஒரிஷாவை ஆண்ட நவீனுக்கு கிடைத்தது வெறும் 51 இடங்கள். இதனால் முதல்வர் அரியணையில் இருந்து நவீன் பட்நாயக் இறங்கியுள்ளார்..சட்டமன்ற தேர்தலில் இந்த நிலைமை என்றால் மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளத்தில் நிலைமை படுமோசம்.. 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக் 20 இடங்களிலும் காங்கிரஸ் மீதமுள்ள 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு ஒரே அடியாக பிஜு ஜனதா தள் சரிந்ததற்கு பாஜகவின் பிரச்சாரத்திற்கு பெரும் பங்கு உண்டு என கூறப்படுகிறது..
ஒடிஷாவை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி அமித்ஷா என மூத்த தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.. நவீனை வீழ்த்த உபயோகிக்கும் அஸ்திரமாக வி கே பாண்டியனை பிரதமர் மோடி கையில் எடுத்தார்.வி கே பாண்டியனுக்கும் தமிழ்நாட்டையும் முன்வைத்தே ஒரிஷா மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஒடிஷாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த விகே பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்து பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் நவீன் பட்நாயக்குடன் மிக நெருக்கமாக இருந்துவந்தார். நவீனின் அரசியல் வாரிசாகவும் வி கே பாண்டியன் பார்க்கப்பட்டார். இந்நிலையில் வி கே பாண்டியனை தாக்கியே பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
பூரி ஜெகன்னாதர் கோவிலின் கருவறை சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்பதில் தொடங்கி ஒரு தமிழரையா உங்களை ஆள விடப்போகிறீர்கள் என ஒடிஷா மக்களை பார்த்து கேட்டது வரை மோடி சரியாக காய் நகர்த்தினார். மோடியின் இந்த உத்தி தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் எதிர்ப்பை தூண்டியது.
ஆனால் மோடியின் இந்த பேச்சு ஒடிஷா மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் அரசியல் மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது.
ஆனால் நவீன் பட்நாயக் 2 முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். மோடியின் அமைச்சரவையில் 10 ஆண்டுகளாக இருந்த நவீன் மோடி கொண்டு வந்த பல சர்ச்சையான மசோதாக்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்தார். இந்த தேர்தலுக்கு முன்னும், நவீன் பட்நாயக்குடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் தொகுதி பங்கீடு குறித்த முரண்பாடால் பிஜு ஜனதா தள் தனித்து தேர்தலை எதிர்கொண்டு மாபெரும் சரிவை கண்டுள்ளது.
77 வயதான நவீன் பட்நாயக் இந்த சரிவில் இருந்து மீண்டு வருவாரா இல்லை இதுவே அவரது அரசியல் சாம்ராஜ்யத்திற்கான முற்றுபுள்ளியா என்பதற்கு வரும் காலமே பதில் சொல்லும்