Optical Illusion: எந்த டம்ளரில் அதிக தண்ணீர் உள்ளது? 5 நொடிதான் டைம்!
எல்லா டம்ளரிலும் ஒரே அளவில்தானே தண்ணீர் இருக்கிறது? இதில் எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தீர்களா?
ரீல்ஸ், வீடியோக்கள், புகைப்படங்கள் என காட்சி சூழ் உலகில், மூளைக்கு வேலை கொடுக்கலாமா?
ஓவியத்தில் ஒரே அளவிலான நான்கு டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்திலும் ஒரே அளவிலான தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் ஒவ்வொரு டம்ளருக்குள்ளும் ஒவ்வொரு விதமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. முதல் டம்ளரில் கத்தரிக் கோல், இரண்டு டம்ளரில் பேப்பர் க்ளிப், 3ஆவது டம்ளரில் அழிப்பான், நான்காவது டம்ளரில் வாட்ச் ஆகியவை மூழ்கிக் கிடக்கின்றன.
இதில், எந்த டம்ளரில் அதிக தண்ணீர் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா? பார்க்கலாம்.
இதோ.. நேரம் முடியப் போகிறது..
....
முடிந்தே விட்டது..
எத்தனை பேர் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?
முடியாதவர்கள் கீழே பாருங்கள்.
Credit: Reddit
எல்லா டம்ளரிலும் ஒரே அளவில்தானே தண்ணீர் இருக்கிறது? இதில் எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தீர்களா?
வாட்ச் கனமான பொருள் என்பதால், அந்த தம்ளரில் அதிக நீர் இருக்கலாம் என்று யோசித்தீர்களா?
ம்ஹூம்.. பள்ளிக் காலத்தில் படித்த இயற்பியல் பாடத்தைத் திரும்பிப் பார்ப்பதற்கான காலகட்டம் இது.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் நினைவுக்கு வருகிறதா? ஒரு பொருள் தண்ணீருக்குள் மூழ்கும்போது, அப்பொருளின் நிறைக்கு சமமான அளவு நீரை வெளியேற்றும். இதன்படி எடை குறைவான பேப்பர் க்ளிப் மூழ்கும்போது சிறிது அளவு அல்லது நீரே வெளியேறி இருக்காது. இதன்மூலம் அந்த டம்ளரில் அதிக நீர் இருப்பது தெரிய வருகிறது.
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!
- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!