Watch Video: இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல்: துடைப்பத்தால் துரத்தியடித்த சிங்கப்பெண்: குவியும் பாராட்டுகள்!
துப்பாக்கியை பார்த்து பயப்படாமல், அந்த பெண் செய்த துணிச்சலான செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்:
ஹரியானா மாநிலம் பிவானி நகரின் டாபர் காலனியைச் சேர்ந்தவர் ஹரிகிஷன். இவர் நேற்று காலை 7.30 மணியளவில் வீட்டிற்கு முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, டாபர் காலணியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 பேர் வந்தனர். அங்கு, ஹரிகிஷனிடம் முதலில் பேச்சு வார்த்தை கொடுத்தனர். பேசிக் கொண்டிருந்தபோது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இரண்டு பேர் ஹரிகிஷனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால், பதறிப்போன ஹரிகிஷன், அவரது வீட்டின் கேட் அருகில் ஓட முயன்றார். அப்போது, அவர் மீது தோட்டா பாய்ந்தது. இதனால், தடுமாறி கிழே விழுந்த அவர், எப்படியோ வீட்டிற்குள் சென்று கேட்டை மூடிக்கொண்டார். அப்போதும் கூட அந்த மர்ம நபர்கள் விடாமல் கேட்டை திறக்க முயன்று துப்பாக்கியால் சுட முயன்றனர். அப்போது, ஹரிகிஷன் வீட்டிற்கு எதிரில் இருந்த ஒரு பெண் தென்னந்துடைப்பத்துடன் ஓடி வந்தார். கையில் வைத்திருந்த தென்னந் துடைப்பம் மூலம் அவர்களை தாக்க பாய்ந்து சென்றார். ஆனால், அதற்குள் அந்த நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
வைரலாகும் வீடியோ:
Wild scenes from Haryana:
— Incognito (@Incognito_qfs) November 28, 2023
- 4 guys attempts to shoot at a man standing in front of his house.
- The shooters miss & the man escapes into his house.
- A woman with broomstick charged at the shooters & scared them away.
Conclusion: Don't mess with Haryanvi women. pic.twitter.com/FdwvQSjZBj
துப்பாக்கியை பார்த்து பயப்படாமல், அந்த பெண் செய்த துணிச்சலான செயல் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் ஹரிகிஷன் என்பவர் சுடத் தொடங்கினர். இதனால் பதற்றமான ஹரிகிஷன், அவரின் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றிருக்கிறார். அப்போதும் கூட, அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த நேரத்தில், எதிர் வீட்டில் இருக்கும் பெண், கையில் வைத்திருந்த தென்னந் துடைப்பத்தால் அந்த கும்பலை தாக்க முயல்கிறார்.
இதன்பின், அந்து கும்பல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு செல்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பெண் செய்த துணிச்சலான செயலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். பின்னர், துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஹரிகிஷனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.