மேலும் அறிய

உலகத்தை சுற்றிப்பார்க்க ஆசையா? கனவு உலகம் ஆரோவில்லுக்கு ஒருமுறை போய்ட்டு வாங்க...

Places to Visit in Puducherry: உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் கனவு உலகமான சர்வதேச நகர் ஆரோவில் செல்லலாம்

ஆரோவில்  : உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் கனவு உலகமான சர்வதேச நகர் ஆரோவில் செல்லலாம். 

புதுச்சேரியில் இருந்து 10 கிலோமீட்டர் துாரத்தில் விழுப்புரம் மாவட்டம் எல்லையில் இந்த சர்வதேச நகர் அமைந்துள்ளது. நாடு, மதம், இனம், அரசியல் என்று எந்த வேறுபாடின்றி உலகில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த நகரில் முறையாக விண்ணப்பித்து, அனுமதி வாங்கி வாழலாம். வயது பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறது. எல்லாருமே அவர்களால் முடிந்த வேலைகளை செய்கிறார்கள். பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மறுசுழற்சி முறைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

மாத்ரிமந்திர்

ஆரோவில் நகரத்தின் ‘ஆத்மா’ என்று கூறப்படுகிறது. இது 124 நாடுகளைச் சேர்ந்த பிரதிநதிகளுடன் 1968ம் ஆண்டு திறக்கப்பட்டது. அமைதிக்கு பெயர் போன இந்த இடத்தில் பல நாடுகளிலிருந்து வந்து தியானம் செய்வார்கள். இந்த இடத்தின் மையத்தில் பக்தியின் சின்னமாக ஒரு படிக பந்து அமைக்கப்பட்டது. அமைதியை விரும்புபவர்கள் கட்டாயம் இந்த இடத்திற்கு சென்று வரலாம்.

தாவரவியல் பூங்கா

ஆரோவில்லில் இருக்கும் இந்த பூங்கா சுமார் 44 ஏக்கர்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இங்கு 250 வகையான மரங்கள் இருக்கின்றன. இயற்கையையும் மனித நேயத்தையும் இணைப்பதே இந்த பூங்காவின் நோக்கமாக இருக்கிறது. அதேபோல் இங்கும் தியானம் செய்வதற்கென தனி அறையும் கல்விக்கூடமும் உள்ளன.

சாவித்ரி பவன்

ஸ்ரீ அரபிந்தோ மற்றும் அவரது தாய் இணைந்து உருவாக்கிய ஒரு இடம் சாவித்ரி பவன். இங்கு புகைப்படங்கள் இருக்கும் அறை, நூலகம், வாசிப்பதற்கென தனி அறை, மந்திரங்கள் ஜபிப்பதற்கான அறை என அனைத்திற்கு தனித் தனியாக அறை இருக்கிறது. மேலும் ஆண்டு முழுவதும் எண்ணற்ற தொழிற்கூடங்கள் நடத்தப்படுகின்றன.

சாதனா காடு

ஆரோவில் என்பது ஒரு காடுகள் நிறைந்த இடம். அந்த காடுகளில் மிகவும் புகழ்பெற்றது சாதனா காடு. இந்த காடுகளை மக்களே தான் பராமரித்து வருகின்றனர். அதேபோல் இந்த காட்டின் வளங்களை எந்தவித வருமானத்திற்கும் பயன்படுத்துவது கிடையாது. முழுக்க முழுக்க இயற்கையை பாதுகாப்பதற்காகவே பராமரிக்கப்படும். இந்த காட்டின் அழகை ரசிக்க கட்டாயம் செல்ல வேண்டும்.

பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள்

வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கும், நல்லிணக்கச் செய்தியைப் பரப்புவதற்கும், ஆரோவில் பல்வேறு கோடைகாலப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது . இந்த கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் ஆரோவில்லின் இலட்சியங்களை அதிக மக்களுக்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த கருத்தரங்குகள் குடியிருப்பாளர்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நகரத்தின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

சினிமா பாரடிசோ பற்றி

ஆரோவில் சினிமா பாரடிசோ (Auroville Cinema Paradiso) என்பது இந்தியாவின் ஆரோவில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம் ஆகும். திரையரங்கில் ஒரு பெரிய திரை மற்றும் அதிநவீன ஒலி அமைப்பு உள்ளது. இது வாரத்தின் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் பிரபலமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் வாங்கக்கூடிய சலுகை நிலையமும் உள்ளது. Auroville Cinema Paradiso ஆரோவில்லில் இருக்கும் போது திரைப்படம் பிடிக்க ஒரு சிறந்த இடம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: விராட் கோலி டக் அவுட்! மிரட்டும் ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: விராட் கோலி டக் அவுட்! மிரட்டும் ஆஸ்திரேலியா!
Kalki 2898 AD:
Kalki 2898 AD: "அசத்தல்! சில நிமிடங்களில் விற்று தீர்ந்த முதல் காட்சி டிக்கெட்கள்" களைகட்டும் 'கல்கி 2898 AD' ரிலீஸ்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Naveen Patnaik:
Naveen Patnaik: "பா.ஜ.க.வுக்கு இனி ஆதரவே கிடையாது, எதிர்ப்பு மட்டுமே" நவீன் பட்நாயக் அதிரடி முடிவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: விராட் கோலி டக் அவுட்! மிரட்டும் ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: விராட் கோலி டக் அவுட்! மிரட்டும் ஆஸ்திரேலியா!
Kalki 2898 AD:
Kalki 2898 AD: "அசத்தல்! சில நிமிடங்களில் விற்று தீர்ந்த முதல் காட்சி டிக்கெட்கள்" களைகட்டும் 'கல்கி 2898 AD' ரிலீஸ்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Naveen Patnaik:
Naveen Patnaik: "பா.ஜ.க.வுக்கு இனி ஆதரவே கிடையாது, எதிர்ப்பு மட்டுமே" நவீன் பட்நாயக் அதிரடி முடிவு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Embed widget