மேலும் அறிய

அமேசான் அலெக்ஸாவைப் பயன்படுத்தி மிரட்டல்.. நிர்வாணப் படம் வெளியீடு.. லண்டன் பெண் கைது!

தனது முன்னாள் காதலரின் தற்போதைய காதலியை மிரட்டுவதற்கும், அந்தரங்கப் படங்களை வெளியிடுவதற்கும் அமேசான் அலெக்ஸா ஸ்மார்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தியதற்காக லண்டன் பெண்ணுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனது முன்னாள் காதலரின் தற்போதைய காதலியை மிரட்டுவதற்கும், முன்னாள் காதலரின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவதற்கும் அமேசான் அலெக்ஸா ஸ்மார்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தியதற்காக லண்டனில் பெண் ஒருவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

லண்டன் நகரைச் சேர்ந்த 46 வயதான ஃபிலிபா காபுல்ஸ்டன் வாரென் என்பவர் தனது முன்னாள் காதலரின் வீட்டில் இருந்து அமேசான் அலெக்ஸா ஸ்மார்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தி, அவரது தற்போதைய காதலியை வீட்டை விட்டு வெளியேறுமாறு தகாத வார்த்தைகளால் திட்டுவதற்காகப் பயன்படுத்தியுள்ளார். மேலும், அத்தம்பதியினரின் படுக்கையறையின் விளக்குகளை அணைப்பது, மீண்டும் ஆன் செய்வது எனத் தொல்லை கொடுப்பதற்கும் அமேசான் அலெக்ஸா ஸ்பீக்கரைப் பயன்படுத்தியுள்ளார். 

பாதிக்கப்பட்டுள்ள அவரது முன்னாள் காதலர் தனது சமூக வலைத்தளக் கணக்குகளைப் பயன்படுத்த முடியவில்லை எனவும் தனது புகாரில் கூறியுள்ளார். ஃபிலிபா அவரது முன்னாள் காதலரின் நிர்வாணப் படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் `நான் குண்டாக இருக்கிறேனா? என்ற கேள்வியோடு பகிர்ந்துள்ளார். 

அமேசான் அலெக்ஸாவைப் பயன்படுத்தி மிரட்டல்.. நிர்வாணப் படம் வெளியீடு.. லண்டன் பெண் கைது!
தனது நாயுடன் ஃபிலிபா காபுல்ஸ்டன் வாரென்

அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டு, மனதிற்குத் துன்பம் அளித்ததாகக் கூறப்பட்டு, ஃபிலிபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஃபிலிபாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜேக்கப் பைண்ட்மேன், ஃபிலிபாவும் அவரது முன்னாள் காதலரும் ஒன்றாக வளர்த்த நாய் மீது அவர் மிகுந்த பாசம் கொண்டிருப்பதாகவும், அவரது நீரிழிவு நோய்க்கு ஆறுதலாக அந்த நாய் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடலில் சர்க்கரை அளவு குறையும் போதெல்லாம், தனது கிண்ணத்தில் இருக்கும் நீரைக் கொட்டி எச்சரிக்கும் பணியை அந்த நாய் செய்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவரும் அவரது முன்னாள் காதலரும் பிரிந்த போது, அந்த நாயைப் பார்ப்பதற்கான அனுமதி அவருக்கு அளிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது உடல்நலத் தேவைகளுக்காக உதவி செய்யும் தனது நாயைப் பார்ப்பதற்காக, அவரது முன்னாள் காதலரின் வீட்டிற்குள் ஸ்மார்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்தி நுழைந்ததாகவும் ஜேக்கப் பைண்ட்மேன் தெரிவித்துள்ளார். வழக்கில் தீர்ப்பு கொடுத்து, பின்னர் பிணை வழங்கிய நீதிபதி ஜான் டென்னிஸ், `குற்றம் நிகழ்ந்த போது, நீங்கள் உங்கள் நாயைக் காணச் சென்றதை நான் முழுமையாக நம்புகிறேன். எனினும், உங்கள் நாயைப் பார்க்கச் சென்றதைக் காரணமாகச் சொல்லி, நீங்கள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் நம்பவில்லை. உங்களிடம் பொறாமை, பழிவாங்கல் முதலான தீய நடவடிக்கைகள் இருப்பதால், அவை இவ்வாறு வெளிப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார். 

அமேசான் அலெக்ஸாவைப் பயன்படுத்தி மிரட்டல்.. நிர்வாணப் படம் வெளியீடு.. லண்டன் பெண் கைது!
அமேசான் அலெக்ஸா ஸ்பீக்கர்

ஃபிலிபாவின் நாய் அவருடன் அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அவரின் முன்னாள் காதலர் தனது செய்திக் குறிப்பில், இந்த நிகழ்வு அவருடைய மரியாதையை அளித்திருப்பதாகவும், அவரை முழுவதுமாகப் பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  
இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Embed widget