X BAN: என்னாது.! எக்ஸ் தளத்துக்கு தடையா.! உச்சநீதிமன்றம் அதிரடி : கோபத்தின் உச்சிக்கு சென்ற மஸ்க்..!
Elon Musk's X platform Ban: எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் ( X ) தளத்திற்கு பிரேசில் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. எதற்காக என பார்ப்போம்.
போலி செய்திகள் பரப்புவது மற்றும் போலி கணக்குகளை முடக்குவது தொடர்பாக, X ( முன்னர் ட்விட்டர் ) தளத்தை முடக்கம் செய்ய பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில், நீதிமன்றம் தெரிவித்தது என்ன , அதற்கு எலான் மஸ்க் தெரிவித்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
தொடர் சர்ச்சைகளில் எலான் மஸ்க்:
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார். இவர் ஆட்டோமொபைல் துறை , விண்வெளித் துறை, தொழில்நுட்ப துறை உள்ளிட்டவைகளில் ஜாம்பவானாக இருக்கிறார். இவர் , ட்விட்டர் தளத்தை வாங்கிய பிறகு , பல்வேறு மாற்றங்களை ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்தினார். மேலும், ட்விட்டர் தளத்தின் பெயரையே மாற்றி எக்ஸ் தளமாக மாற்றினார். மேலும் , அதன் லோகோவையும் மாற்றினார். இதில் சில பிரச்னைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளாகினார்.
மேலும் இவர் , அமெரிக்க தேர்தலில் ட்ரம்பிக்கிற்கு ஆதரவாகவும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாகவும் சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.
சட்ட பிரதிநிதி நியமிக்க உத்தரவு:
இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணக்குகளைத் தடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக,எலான் மஸ்க் மற்றும் பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் இடையே மோதல் தொடங்கியது.
போலி கணக்குகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளை தடுக்க, நீதிமன்றமானது பலமுறை எச்சரித்த போதிலும், இந்த உத்தரவை எலான் மஸ்க் தளம் பின்பற்றவில்லை.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்திற்கான பிரேசிலில் ஒரு சட்டப் பிரதிநிதியை நியமிக்கவும் உத்தரவிட்டது.
ஆனால் எக்ஸ் நிறுவனம் சட்டப் பிரதிநிதியை நியமிக்கவுமில்லை.
வங்கி கணக்கு முடக்கம்:
இதையடுத்து, பிரேசில் தொலைத்தொடர்பு நிறுவனமானது , எக்ஸ் தளத்தை முடக்கியது. மேலும், 3.25 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து, எலான் மஸ்க்கிற்கு சொந்தமான செயற்கைக்கோள் துறை நிறுவனமான ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வங்கி கணக்கையும் முடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
எலான் மஸ்க் விமர்சனம்:
இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நீதிபதி டி மோரேஸை "சர்வாதிகாரி" என காட்டமாக எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
Exactly.
— Elon Musk (@elonmusk) September 2, 2024
This platform does not seek to impose the laws of the United States on other countries – we obey the laws of that country in that country.
The problem in Brazil is that @AlexandreFiles we were being told to break Brazilian laws and that we would be sanctioned if we… https://t.co/jt9nAHjd9V
எலான் மஸ்க் பிரேசிலிய சட்டத்திற்கு இணங்க மறுப்பது சமூக ஊடக தளங்களின் பொறுப்புகள் மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு எந்த அளவிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.