Xiaomi OLED Vision TV 55: ஷாவ்மி நிறுவனத்தின் OLED வடிவ ப்ரீமியம் டிவி மாடல்.. என்ன சிறப்பம்சம்? விவரங்கள் இங்கே!
ஷாவ்மி OLED Vision 55 தொலைக்காட்சியின் விலை 83,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 இன்ச் OLED வகைத் தொலைக்காட்சிகளில் விலை குறைந்ததாகவும், பல்வேறு அம்சங்கள் கொண்டதாகவும் இந்த மாடல் இருக்கிறது.
இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஷாவ்மி நிறுவனத்தின் பங்களிப்பு மிக அதிகம் என்பதால் தொலைக்காட்சி முதலான பிற தயாரிப்புகளில் அதன் பங்களிப்பு பெரிதும் வெளியில் வருவதில்லை. இந்தியா முழுவதும் ஸ்மார்ட் தொலைக்காட்சி பயன்பாட்டை அனைவரும் பயன்படுத்தும் விதமாக முதன்முறையாக அறிமுகப்படுத்தியது ஷாவ்மி நிறுவனம். ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே, தற்போது ப்ரீமியம் தொலைக்காட்சிகளை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாவ்மி 12 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் வெளியிடப்பட்ட போது, ஷாவ்மி நிறுவனத்தின் புதிய ஷாவ்மி OLED Vision TV 55 மாடல் வெளியிடப்பட்டது.
ஷாவ்மி OLED Vision TV 55 மாடலுக்கு முன்பாகவே, ஷாவ்மி நிறுவனம் சுமார் 1.3 லட்சம் ரூபாய் விலையில் 75 இன்ச் தொலைக்காட்சி ஒன்றை அறிமுகப்படுத்தியது. பிற OLED தொலைக்காட்சி மாடல்களுடன் ஒப்பிடுகையில், ஷாவ்மி நிறுவனத்தின் தற்போதைய 55 இன்ச் அளவுகொண்ட மாடல் விலை அதிகம் என்ற போதும், இதில் கூடுதலான சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்தியாவில் 55 இன்ச் அளவு கொண்ட OLED வகை தொலைக்காட்சிகள் எதுவும் இல்லை. எல்.ஜி நிறுவனத்தின் LG OLED A1 மாடலின் விலை 99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி OLED Vision TV 55 மாடலின் சிறப்பம்சங்கள் என்ன?
ஷாவ்மி நிறுவனத்தின் தயாரிப்பே அதன் தரத்தை உணர்த்துகிறது. அதன் மென்மையான நீண்ட திரை பார்ப்பவர்களை ஈர்க்கிறது. தொலைக்காட்சி பயன்படுத்தப்படாத போதும், அதன் திரை பார்ப்பதற்கு அழகாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைக்காட்சியில் பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் dual-band Wi-Fi, Bluetooth 5 முதலான வயர்லெஸ் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வயர்லெஸ் கனெக்ஷன் மேற்கொள்வதற்கான 2.4Ghz, 5Ghz ஆகிய இரு அலைவரிசைகளும் சரியாஅ செயல்படுபனை. மேலும் இந்த மாடலில் மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ஈத்தர்நெட் போர்ட், ஆப்டிகல் ஏவி, ஆண்டென்னா போர்ட் முதலானவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஷாவ்மி நிறுவனத்தின் பிற மாடல்களில் இருப்பதைப் போன்ற ரிமோட் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பட்டன்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஷாவ்மி OLED Vision 55 தொலைக்காட்சியின் 55 இன்ச்ஹ் டிஸ்ப்ளே சுமார் 3,840 x 2,160 பிக்சல் ரிசொல்யூஷன் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், இதில் இருக்கும் OLED பேனல் மூலமாக டால்பி விஷன் ஐக்யூ மூலமாக சூழலுக்கு ஏற்றவாறு திரையின் ப்ரைட்நெஸ் தகவமைத்துக் கொள்கிறது.
இந்தத் தொலைக்காட்சியில் சுமார் 8 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு, 30W அவுட்புட் வழங்குகின்றன. மேலும் இதில் டால்பி அட்மாஸ் சிஸ்டமும் உண்டு. இந்தத் தொலைக்காட்சியில் quad-core A73 சிப் பொருத்தப்பட்டு, 3GB RAM, 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் 11 மூலமாக இயங்கும் இந்தத் தொலைக்காட்சியின் சிறப்பம்சமாக ஷாவ்மி நிறுவனத்தின் Patchwall UI இடம்பெற்றுள்ளது.
ஷாவ்மி OLED Vision 55 தொலைக்காட்சியின் விலை 83,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 இன்ச் OLED வகைத் தொலைக்காட்சிகளில் விலை குறைந்ததாகவும், பல்வேறு அம்சங்கள் கொண்டதாகவும் இந்த மாடல் இருக்கிறது.