Telegram Update: டெலிகிராம் புதிய லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகள்.. இனிமே இதிலும் அசத்தலாம்..
டெலிகிராம் 8.0 வர்சன் அப்டேட்ட்லில், ஃபார்வேர்டு மெசேஜில் அனுப்புநரின் பெயரை நீக்குவது, ஃபோட்டோ கேப்சனை நீக்குவது, டவுன்லோட் மேனஜெர், லைவ் ப்ராட்காஸ்ட் மற்ற டூல் மூலம் பங்கெடுப்பது போன்றவற்றை வழங்கியுள்ளது.
![Telegram Update: டெலிகிராம் புதிய லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகள்.. இனிமே இதிலும் அசத்தலாம்.. telegram launches live stream feature heres how it works Telegram Update: டெலிகிராம் புதிய லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகள்.. இனிமே இதிலும் அசத்தலாம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/13/23233d15eebe74382039aaa7b6e1448c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலக அளவில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் சுமார் 100 கோடிக்கும் மேலானாவர்கள். தங்களது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை வழங்க புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது டெலிகிராம். அந்த வகையில், தற்போது புதிய விஸ்வல் மற்றும், டெலிகிராம் செயல்பாடுகளில் புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.
டெலிகிராம் 8.0 வர்சனில், ஐ.ஒ.எஸ். பயனாளர்களுக்கு புதிய டவுண்டோடு மேனஜர் ஆப்சனை மெனு பாரின் கீழ் டிஸ்ப்ளே ஆகும்படி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஃபைல்ஸ் மற்றும் ஃபோட்டோக்களை டவுன்லோடு செய்வதில் முதன்மையை தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒன்றிருக்கு மேற்பட்ட ஃபோட்டோக்களை தேர்வு செய்து அதை பகிர்வதற்கான புது வசதி கிடைக்கிறது.
ஆண்ராய்ட் பயனாளர்கள் செமி- ட்ரான்ஸ்ப்ரண்ட்(semi-transparent interface) இண்டஃபேஸ் வசதியை பெறுகிறார்கள். மேலும், ஆண்ட்ட்ராய் மற்றும் மாக், ஐ.ஒ.எஸ். ஆகியவற்றில் டெலிகிராம் லாகின் செய்யும்போது புதிய அனிமேசன் வகையிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
. மற்ற ஆப்கள் ஆப்சன் மூலம், டெலிகிராம் குழு ப்ராட்காஸ்டிங் லைவில் அவர்களும் இணையலாம். இதில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு ஒ.பி.எஸ். ஸ்டூடியோ மற்றும் எக்ஸ்.ஸ்ப்ளிட் ப்ராட்காஸ்டர் (OBS Studio and XSplit Broadcaster.) ஆகியவைகள் மூலம் இணைந்து கொள்ளும் திறனை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகிராம் பயனாளர்கள் தங்களது யூசர்நேம் உடன் t.me என்ற லிங்கை பகிந்துவிட்டால், அவர்கள் லைவ் ப்ராட்காஸ்டில் இணைந்து கொள்ளலாம்.
ஏற்கனவே புதிய அப்டேட்களில், லைவ் ஸ்ட்ரீம் அம்சம் எண்ணிக்கையற்ற பார்வையாளர்களை அனுமதிக்கும், தங்கள் கையை உயர்த்தி ஒளிபரப்புகளில் சேர வேண்டும், ஃபார்வேர்டு மெஜ்சேஜில் பயனர்கள் அனுப்புநரின் பெயரை மறைப்பது, ஃபோட்டோ அல்லது மீடியா செய்திகளில் தலைப்புகளை மறைப்பது, தாங்கள் அனுப்ப விரும்பாத செய்திகளைத் தேர்வு செய்து நீக்கலாம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது. டெலிகிராம் குழுப் வீடியோ அழைப்புகள் 1,000 பார்வையாளர்கள் வரை அனுமதி, வீடியோக்களை 0.5x அல்லது 2x வேகத்தில் பார்க்கலாம் போன்ற அப்டேட்களை வழங்கியுள்ளது.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
Tirunelveli: தன்னுடைய சொந்த செலவில் 21 மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நெல்லை ஆட்சியர்!
300 மி.லி தண்ணீர் போதும், சில பூண்டு பற்கள், ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்.. இந்த மேஜிக்கை பாப்பீங்க..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)