மேலும் அறிய

Sunita Williams: விண்வெளியில் சற்று பெரிதான சுனிதா வில்லியம்சின் தலை: விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Sunita Williams Health Issue: அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பவுள்ள நிலையில், உடல்நிலை குறித்தான கவலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ்  மிக நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் , அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச விண்வெளி நிலையம்:

கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதை  சோதனை செய்யும் வகையில், இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. 
இவர்கள் இருவரது பயணமானது, சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

Sunita Williams: விண்வெளியில் சற்று பெரிதான சுனிதா வில்லியம்சின் தலை: விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

பூமி திரும்பவது எப்போது?

இந்நிலையில்,  இவர்களது காலமானது 8 மாதங்களுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து,  சில வாரங்களுக்கு முன்பு ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி வீரர்கள் இல்லாமல் பூமி திரும்பியது. அந்த தருணத்தில் ஸ்டார்லைனர் விண்கலத்தின் சிக்கல்கள் முழுமையாக சரிசெய்யப்படாத காரணத்தால், விண்வெளி வீரர்களை அழைத்து வருவதில் நாசா மறுத்துவிட்டது.

இதையடுத்து,  அவர்களை பூமிக்கு கொண்டு வர எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.  SpaceX க்ரூ டிராகன் விண்கலம், கடந்த செப்டம்பரில் நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை  பூமியிலிருந்து விண்வெளிக்கு அழைத்துச் சென்றது.  இதன் மூலம், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்  வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

Sunita Williams: விண்வெளியில் சற்று பெரிதான சுனிதா வில்லியம்சின் தலை: விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Also Read: ISS Air Leak: சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாயுக்கசிவால் அதிர்ச்சி: சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்.!என்ன நடந்தது?

உடல்நிலையில் மாற்றம்:

இந்நிலையில் , விண்வெளியில் நீண்டகாலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மிக நீண்டகாலம் தங்கி இருப்பதால், அவர்களின் உடல்நிலையில் சற்று  மாற்றம்  ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சுனிதா வில்லியம்சின் தலை சற்று பெரிதாக ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் புவியீர்ப்பு விசை இருக்காது அல்லது மிகவும் குறைவாக இருக்கும். இதனால், உடலில் உள்ள நீர்ம மூலக்கூறுகள் சற்று , மேலே எழும்ப வாய்ப்பு இருக்கும். இதனால் நீர்ம மூலக்கூறுகள் தலைப்பகுதியில் சற்று அதிகம் செல்ல வாய்ப்பு ஏற்படும். இதனால், சுனிதா வில்லியம்ஸின் தலைப்பகுதி சற்று பெரிதாக இருக்கும். 

இது, விஞ்ஞானிகள் விண்வெளியில் இருப்பதால் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்கலத்தை பயன்படுத்தி பூமிக்கு உடனடியாக திரும்பி விடலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்திகள்

Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
Embed widget