Realme Pad Tablet : ரியல்மியின் அடுத்த அதிரடி!! அசரடிக்க வருகிறது Realme -ன் புதிய Tablet! என்னென்ன வசதிகள்?
வருகிற மே 26 ஆம் தேதி ரியல்மி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.
பிரபல பட்ஜெட் மொபைல்போன் நிறுவனமான ரியல்மி . தனது அடுத்த தலைமுறை டேப்லெட்டை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் பெயர் மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் Weibo என்னும் இணையதளத்தில் தனது அடுத்த டேப்லெட்டின் டீசரை ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக கசிந்த தகவலின் அடிப்படையில் ரியல்மியின் அடுத்த டேப்லெட்டானது நிச்சயம் 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது வெளியாகவுள்ள டேப்லெட்டின் பெயர் Realme Pad 5G ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
Realme Pad X 5G Official Renders pic.twitter.com/9i0wWgI3Eo
— SufiyanTechnology (@RealSufiyanKhan) May 20, 2022
Weibo பதிவில் ரியல்மியின் Realme Pad 5G ஆனது “king of tablets" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது டேப்லெட்டுகளின் அரசன் என்றே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. வசதிகள் மற்றும் விலையை பொருத்தவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் கூட . JD.com என்னும் வர்த்தக தளத்தில் சில அடிப்படை வசதிகள் குறித்தான தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி Realme Pad X 5G ஆனது 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி என்னும் இரண்டு விதங்களில் RAM மற்றும் உள்ளீட்டு மெமரி வசதிகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் நினைவக திறனுக்கு ஏற்ப விலைகளிலும் மாறுபாடுகள் இருக்கலாம். டீசரில் ஒரு பின்பக்க கேமராவையும் பார்க்க முடிகிறது. இது பிரைட் செஸ்போர்டு கிரீன், ஸ்டார் கிரே மற்றும் சீ சால்ட் ப்ளூ வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்பட்டுள்ளது. வருகிற மே 26 ஆம் தேதி ரியல்மி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.
realme Pad 5G to launch soon in India.#realme #realmePad5G pic.twitter.com/xUMKC7IRm6
— Oneily Gadget (@OneilyGadget) April 17, 2022
மேலும், Realme டேப்லெட்டில் Snapdragon 870 SoC மாறுபாடு மற்றும் Snapdragon 8 Gen 1+ SoC என இரண்டு மாறுபாடுகள் இருக்கலாம். முன்பு 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் ( refresh rate) 2.5K (2,520x1,680 பிக்சல்கள்) வசதிகளுடன் , LCD டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மொபைல் போன்களை விடவும் , டேப்லெட்டில் பேட்டரியின் திறன் அதிகமாகத்தான் இருக்கும் என்பதால் 8,360mAh மூலம் வரவிருக்கும் புதிய டேப்லட் உருவாக்கப்பட்டிருக்கும் என வெளியான முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Realme Pad 5G இன் Snapdragon 8 Gen 1+ SoC மாறுபாடு சீனாவில் Master Explorer பதிப்பு என அழைக்கப்படலாம்.