மேலும் அறிய

உஷார்! இனி UPI-யில் பணம் அனுப்பினால் உடனடியாகப் போய் சேராது - ஏன் தெரியுமா?

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், 10,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் தனிநபர் இடையிலான பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு மணிநேரம் வரை காலதாமதத்தை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

யுபிஐ பணவரித்தனையில்  மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் நண்பர்களுடன் பில் தொகையைப் பகிர்ந்து கொள்வது வரை அன்றாட வாழ்க்கையில் பணப் பரிமாற்றம் செய்யும் முறையையே மாற்றியமைத்துள்ளது. ஆனால், யுபிஐ-ன் இந்த உடனடி பணப்பரிமாற்றத்தில் சில முக்கிய மாற்றங்கள் 

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், 10,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் தனிநபர் இடையிலான (P2P) பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு மணிநேரம் வரை காலதாமதத்தை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது விவாத அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

பணபரிவர்த்தனை தாமதமாகும்?

இந்தத் திட்டத்தின்படி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு யுபிஐ மூலம் 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை அனுப்பினால், அந்தத் தொகை உடனடியாக அனுப்புநரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இருப்பினும், அந்தப் பணம் ஒரு மணிநேரத்திற்குப் பிறகுதான் பெறுநரின் கணக்கைச் சென்றடையும். இந்த ஒரு மணிநேர இடைவெளியில், ஏதேனும் தவறு இருப்பதாக உணர்ந்தால் பணத்தை அனுப்பியவர் அந்தப் பரிமாற்றத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி "கோல்டன் ஹவர்" (Golden Hour) என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் பணத்தை அனுப்பியவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவும், ஏதேனும் மோசடி நடந்திருப்பதாகச் சந்தேகித்தால் பணத்தைத் தடுத்து நிறுத்தவும் கால அவகாசம் கிடைக்கும்.

இந்த விதிமுறையானது தனிநபர் இடையிலான (P2P) பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைகளில் கியூஆர் (QR) கோடு ஸ்கேன் செய்து வணிகர்களுக்குச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. மேலும், ஆட்டோ-டெபிட் மற்றும் சந்தா அடிப்படையிலான (Subscription) பேமெண்ட்கள் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போலவே செயல்படும்.

இந்த மாற்றம் ஏன்?

இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலில் மோசடிகள் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளன. பெரும்பாலான மோசடி வழக்குகளில், பணம் சில நிமிடங்களிலேயே பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டு விரைவாக ரொக்கமாக எடுக்கப்படுகிறது. இதனால் அந்தப் பணத்தை மீட்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிறது.

இந்தக் காலதாமதத்தைக் கொண்டு வருவதன் மூலம், ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி, மோசடியான பரிமாற்றங்களை அடையாளம் கண்டு பணம் தவறான நபர்களின் கைக்குச் செல்வதற்கு முன்பே அதைத் தடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. இந்தப் பரிந்துரை தற்போது விவாதக் கட்டத்திலேயே உள்ளது, இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
Embed widget