Venus Jupiter Conjunction: ஒரே நேர்க்கோட்டில் வரும் வீனஸ் மற்றும் ஜூபிடர்.. இதை எப்படி பார்ப்பது? முழு விவரம் ..
மார்ச் 1ம் தேதி வீனஸ் மற்றும் வியாழன் கோள் மேற்கு வானத்தில் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மார்ச் 1ம் தேதி வீனஸ் மற்றும் வியாழன் கோள் மேற்கு வானத்தில் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
சூரிய குடும்பத்தில் அனைத்து கோளகளும் சூரியனைச் சுற்றி அதன் சுற்றுவட்டாரப் பாதையில் வருவது வழக்கமான ஒன்று. அப்படி சுற்றி வரும்போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும், அதுவும் சில சமயம் பூமிக்கு நெருங்கி வரும். இந்த அரிய வானியல் நிகழ்வை conjunction என அழைக்கப்படும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22ஆம் தேதி வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு பூமிக்கு அருகில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றியது. இந்த நிகழ்வை பலரும் கண்டு ரசித்தனர். பார்ப்பதற்கு 3 நட்சத்திரங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் தோன்றியது. கடந்த ஆண்டு செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் முழுவது வெள்ளி மற்றும் வியாழன் இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வந்தது. இதனால் மாலை நேரத்தில் மேற்கு வானத்தில் இவை இரண்டும் பிரகாசமாக தெரிந்தது. குறிப்பாக இன்று மார்ச் 1ஆம் தேதி இந்த இரண்டு கோள்களும் இதுவரை இல்லாத வகையில் பூமிக்கு மிகவும் நெருங்கி ஒரே நேர்க்கோட்டில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோள்களும் சூரியன் மறைவிற்கு பின் மேற்கு வானத்தில் தோன்றும். வெள்ளி இந்திய நேரப்படி இரவு 8:40 மணிக்கு மறையும், வியாழன் இரவு 8:38 மணிக்கு இந்திய நேரப்படி மறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோவன் பல்கலைக்கழகத்தில் உள்ள எடெல்மேன் கோளரங்கத்தின் படி, மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் கிரகங்களின் இணைப்பு வெள்ளி மற்றும் வியாழன் 32 ஆர்க்மினிட்கள் இருக்கும். ஒரு ஆர்க்மினிட் ஒரு டிகிரியின் 1/60 க்கு சமம், அதாவது 32 ஆர்க்மினிட்கள் கிட்டத்தட்ட அரை டிகிரிக்கு சமம். இது முழு நிலவின் அகலத்திற்குச் சமமாகும் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக தொலைநோக்கி பயன்படுத்தி இது போன்ற அரிய நிகழ்வை காணலாம். வீன்ஸ் மற்றும் வியாழன் மார்ச் 1ஆம் தேதி மிக நெருக்கமாக வானில் இரண்டு புள்ளிகளாகத் தோன்றும் அதாவது பார்ப்பதற்கு இரண்டு நட்சத்திரங்களை போல் இருக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு மேற்கு வானத்தில் இந்த கிரகங்களை பார்க்க முடியும், மேலும் இந்த காட்சியைக் காண தொலைநோக்கியோ தேவையில்லை என கூறுகின்றனர்.
பூமியிலிருந்து வெள்ளி மற்றும் வியாழன் மிகவும் பிரகாசமாக தெரியும் கோளகளாகும். வெள்ளி பூமியிலிருந்து மிகவும் அருகில் இருப்பதாலும், சூரிய ஒளியை உள்வாங்கி அதிகமாக வெளியிடுவதாலும் பிரகாசமாக தெரியும். வியாழன் பூமியை விட 11 மடங்கு பெரிய கோள் என்பதால் பிரகாசமாக தெரியும். சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களும் அதனதன் வெவ்வேறு நீளமுள்ள வட்டப்பாதைகளில் சுற்றி வரும் நிலையில் மிக அரிதாக இதுபோல ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் வானியல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22ஆம் தேதி வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு பூமிக்கு அருகில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றிய வானியல் நிகழ்வை பலரும் புகைப்படம் எடுத்து சமூக வளைதளங்களில் பகிர்ந்தனர்.