Instagram, FB Monetisation: பேஸ்புக், இன்ஸ்டாவில் இனிமேல் பண மழைதான்.! ஓனர் மார்க்கின் அதிரடி அறிவிப்புகள்!
பணம் ஈட்டும் தளமாகவும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டா மாறி வருகிறது. அடுத்தக்கட்ட அப்டேட்டை மார்க் வெளியிட்டுள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மார்க் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
உணவு இருக்கிறதோ இல்லையோ.... உடை இருக்கிறதோ இல்லையோ... பணம் இருக்கிறதோ இல்லையோ... மொபைல் போனில் ‛பேஸ்புக்’ ஆப் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் பலருக்கு. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட பேஸ்புக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஊடகவியலாளராக மாற்றிய பெருமையும், மாற்றி வரும் பெருமையும் பேஸ்புக் செயலிக்கு மட்டுமே உண்டு. உலகில் எந்த செயலி முடங்கினாலும் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது.
அதே நேரத்தில் ஒரு நொடி முடங்கினால் கூட பேஸ்புக் பயனர்கள் இந்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு உடலோடு உடையாக இணைந்து விட்டது பேஸ்புக். பேஸ்புக் மட்டுமின்றி இன்ஸ்டாவையும் இப்போது இளசுகளின் கைகளில் தவழவிட்டுள்ளார் மார்க். வெறும் பொழுதுபோக்காகவே இல்லாமல் பணம் ஈட்டும் தளமாகவும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டா மாறி வருகிறது. இந்நிலையில் அதில் அடுத்தக்கட்ட அப்டேட்டை மார்க் வெளியிட்டுள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மார்க் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
’’ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர்கள் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகளை உருவாக்க உள்ளோம். மற்றும் மெட்டாவெர்ஸுக்காக உருவாக்குபவர்களுக்கு உதவும் தகவல்களை வெளியிடுகிறோம். அதிகமான மக்கள் தாங்கள் விரும்பும் ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்யக்கூடிய எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உள்ளோம். அதைச் செய்வதில் எங்களைப் போன்ற தளங்கள் பங்கு வகிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 2024 ஆம் ஆண்டு வரை Facebook மற்றும் Instagram இல் வருவாய் பகிர்வை நிறுத்தி வைப்போம். கட்டண ஆன்லைன் நிகழ்வுகள், சந்தாக்கள், பேட்ஜ்கள் மற்றும் புல்லட்டின் ஆகியவை இதில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Facebook இல் கிரியேட்டர்களுக்கு ரீல்ஸ் ப்ளே போனஸ் திட்டத்தை விரைவில் அனுமதிக்க உள்ளோம். மேலும் படைப்பாளிகள் தங்கள் Instagram ரீல்களை Facebook இல் கிராஸ்-போஸ்ட் செய்து அங்கேயும் பணமாக்க அனுமதிக்கிறோம்.
Interoperable Subscriptions: சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான Facebook குழுக்களுக்கான அணுகலைப் பிற தளங்களில் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு வழங்க நாங்கள் அனுமதிக்கிறோம்.
Facebook Stars: தகுதியுள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்யவுள்ளோம். இதன் மூலம் அதிகமான மக்கள் தங்கள் Reels, லைவ் அல்லது VOD வீடியோக்கள் மூலம் சம்பாதிக்கத் தொடங்கலாம்.
Monetizing Reels: Facebook இல் கிரியேட்டர்களுக்கு ரீல்ஸ் ப்ளே போனஸ் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். மேலும் படைப்பாளிகள் தங்கள் Instagram ரீல்களை Facebook இல் கிராஸ்-போஸ்ட் செய்து அங்கேயும் பணமாக்க அனுமதிக்கிறோம்.
Digital Collectibles: எங்கள் சோதனையை விரிவுபடுத்துகிறோம், அதனால் உலகம் முழுவதும் உள்ள அதிகமான படைப்பாளிகள் தங்கள் NFTகளை Instagram இல் காண்பிக்க முடியும். இந்த அம்சத்தை விரைவில் பேஸ்புக்கிலும் கொண்டு வருவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.