மேலும் அறிய

Motorola Edge 20 Launch: மோடோரோலா வெளியிட்ட அசத்தலான இரண்டு மாடல்கள்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

மோடோரோலா நிறுவனம் தனது இரண்டு வகை மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.  

Motorola Edge 20 மற்றும்  Motorola Edge 20 Fusion ஆகிய மாடல்கள் இரண்டும் மூன்று வகையான பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. இவை இரண்டுமே தூசு மட்டும் தண்ணீர் ரெசிஸ்டண்ட் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. Motorola Edge 20 மாடலானது OnePlus Nord 2, Vivo V21 மற்றும் Samsung Galaxy A52 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, Motorola Edge 20 Fusion மாடல் OnePlus Nord CE, Samsung Galaxy M42 மற்றும் Mi 10i ஆகிய செல்போன் மாடல்களுக்கு நேரடி போட்டியாக் இருக்குமென கணிக்கப்படுகிறது.

விலை நிலவரம்:

Motorola Edge 20 விலையை பொருத்தவரை இந்தியாவில் ரூ. 29,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலையாகும். இந்த மாடல் பிளிப்கார்ட் மற்றும் சில முன்னணி செல்போன் விற்பனை செய்யும்கடைகளிலும் ஆகஸ்ட் 24 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

Motorola Edge 20 Launch: மோடோரோலா வெளியிட்ட அசத்தலான இரண்டு மாடல்கள்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Motorola Edge 20 Fusion விலையை பொருத்தவரை இந்தியாவில் ரூ.21,499 முதல் தொடங்குகிறது. ஸ்டோரேஜ் மற்றும் ரேம் அளவைப் பொருத்து விலையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 6GB + 128GB மாடல் ரூ.21,499க்கும்,   8GB + 128GB மாடல் ரூ.22,999க்கும் விற்பனையாகவுள்ளது. இரு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கப்பெறும். இந்த மாடல் ஆகஸ்ட் 27 முதல் ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி செல்போன் விற்பனை கடைகளில் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்:

Motorola Edge 20:
இந்த மாடலில் டிஸ்பிளே வழக்கமான ஸ்மார்ட்போன்களில் அளவாகவே உள்ளது. அதன்படி 6.70 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவை பொருத்தவரை 32 மெகாபிக்ஸலாக உள்ளது. இதனால் தெளிவான செல்ஃபி போட்டோ, வீடியோ கால் வசதியை பெறலாம். பின்பக்க கேமராவை பொருத்தவரை 108 மெகாபிக்ஸல்+16மெகாபிக்ஸல்+8மெகாபிக்ஸல் என்ற 3 வகை கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி கெபாசிட்டி 4000mAh ஆக உள்ளது. இதனால் நல்ல பேட்டரி லைஃப் கிடைக்கும். அதேபோல் சார்ஜரும் 30W டர்போபவர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் எடை 163 கிராம் ஆகும். ஆண்ட்ராய்டு 11ம், 1080x2400 பிக்ஸல் ரெசோலேஷனும் கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 778G பிராஸசர் கொடுக்கப்பட்டுள்ளது.

Motorola Edge 20 Launch: மோடோரோலா வெளியிட்ட அசத்தலான இரண்டு மாடல்கள்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Motorola Edge 20 Fusion:
இந்த மாடலும்  Motorola Edge 20 மாடலுக்கான டிஸ்பிளே அளவையே கொண்டுள்ளது. அதன்படி 6.70 இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவும் Motorola Edge 20மாடலை போலவே கொடுக்கப்பட்டுள்ளது. 32 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவும்,  108 மெகாபிக்ஸல்+16மெகாபிக்ஸல்+8மெகாபிக்ஸல் என்ற 3 வகை பின்பக்க கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி கெபாசிட்டி 5000mAhஆக உள்ளது. MediaTek Dimensity 800U பிராஸசர் கொடுக்கப்பட்டுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget