(Source: ECI/ABP News/ABP Majha)
Nothing Phone 1 : ஜூன் 12-ஆம் தேதி அறிமுகமாகிறது Nothing 1 போன்: மார்க்கெட்டுக்கு இது புதுசு.. செம்ம அப்டேட்..
இந்தத் தொலைபேசி ஏற்கனவே தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு (NBTC) சென்றுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் ஃபோன் 1 ஐ அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. நத்திங் நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து வெளியாகும் முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. நத்திங் ஃபோன் 1 வருகின்ற ஜூலை 12ம் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் தொலைபேசி ஏற்கனவே தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு (NBTC) சென்றுள்ளது.
View this post on Instagram
இந்த மொபைல் போனை இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக வாங்கலாம். நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள சில தகவல்களின்படி, செலவைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இந்தத் தொலைபேசி உள்நாட்டில் தயாரிக்கப்படும்.
டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் என்பவரின் ட்வீட் படி, நத்திங் ஃபோன் 1தாய்லாந்தின் NBTC சான்றிதழைப் பெற்றுள்ளது மற்றும் A063 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது.மற்றொரு சமீபத்திய தகவலின்படி, நத்திங் போன்1 தொடக்க விலையாக சுமார் 500 யூரோக்களில் வெளியிடப்படலாம். அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.41,519. இந்த மாடல் மிட் ரேஞ்ச் வகையறா போன்களுக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
நத்திங் போன் 1 குவால்காம் சிப்செட்டுடன் வருகிறது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின் சொந்த ஆண்ட்ராய்டு சாப்ட்வேரான ஆண்ட்ராய் 12-அடிப்படையில் உருவான NothingOS உடன், உருவாக்கப்பட்டிருக்கும் தனித்துவமான வடிவமைப்பு மொழியை இந்த ஸ்மார்ட்ஃபோன் கொண்டிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட OS அப்டேட்ஸ் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்ஸ்களுடன் வரும். வால்பேப்பரின் சமீபத்திய அறிக்கை நத்திங் ஃபோன் 1ன் இன்டர்னல் சர்க்யூட்ரி மற்றும் டிசைனின் ஆரம்ப வடிவமைப்புகளைக் பிரதிபலிக்கிறது.