மேலும் அறிய

Apple Glowtime Event: ஆப்பிள் பயனாளர்களே..! இன்று லான்ச் ஆகிறது ஐபோன் 16 சீரிஸ் போன், எதிர்பார்ப்புகள் என்ன? ஒரு சர்ப்ரைஸ்

Apple Glowtime Event: இன்று நடைபெற உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் க்ளோடைம் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

Apple Glowtime Event: ஆப்பிள் நிறுவனத்தின் க்ளோடைம் நிகழ்ச்சியில், ஐபோன் 16 சீரிஸ் மற்றும் வாட்ச் சீரிஸ் 10 ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம்.

ஆப்பிள் ”க்ளோடைம்” நிகழ்ச்சி:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.  அந்த நிகழ்வின் போது, ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தும் மற்றும் iOS 18 இன் பொது வெளியீடு பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,குறிப்பாக, ஆப்பிள் நுண்ணறிவு ஆதிக்கம் பற்றி பல்வேறு அப்டேட்கள் வெளியாகக் கூடும். நிறுவனத்தின் நிகழ்ச்சி அழைப்பிதழில்,  ஆப்பிள் லோகோவை சுற்றிலும் வெவ்வேறு வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று kஅலந்து சூழ்ந்து இருப்பதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே "இட்ஸ் க்ளோடைம்" என்றும் எழுதப்பட்டுள்ளது. ஜூன் மாத உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் முக்கிய உரைக்கு அனுப்பப்பட்ட இந்த வடிவமைப்பை தற்போது மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் AI அம்சங்களின் தொகுப்பான Apple Intelligence க்கு உலகை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ஆப்பிள் க்ளோடைம் நிகழ்ச்சிய நேரலையில் பார்ப்பது எப்படி என்ற விவரங்களை இங்கே அறியலாம். 

ஐபோன் 16 நிகழ்ச்சி: நேரலையில் பார்ப்பது எப்படி?

ஆப்பிளின் இந்த முக்கிய நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிளின் இணையதளம், யூடியூப் அல்லது ஆப்பிள் டிவி ஆப்ஸ் மூலம் நிகழ்வை நேரலையில் பார்க்கலாம். 

ஆப்பிளின் ஐபோன் 16 நிகழ்ச்சி: எதிர்பார்ப்புகள் என்ன?

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய, ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 சீரிஸ் மட்டுமின்றி, ஆப்பிள் அதன் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸின் சமீபத்திய மாடலையும் அறிமுகப்படுத்தக்கூடும்.  அதாவது தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஐ,  ஐபோன் 16 சீரிஸ் உடன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 16 விலை?

ஐபோன் 16 இன் விலை சுமார் $799 (தோராயமாக ரூ. 66,300) இருக்கலாம் என்றும், ஐபோன் 16 பிளஸ் $899 (சுமார் ரூ. 74,600) இல் தொடங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரோ மாடல்களுக்கு, ஐபோன் 16 ப்ரோ $1,099 (தோராயமாக ரூ. 91,200) இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iPhone 16 Pro Max இன் ஆரம்ப விலை $1,199 (சுமார் ரூ. 99,500) ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மதிப்பிடப்பட்ட விலைகள் துல்லியமாக இருந்தால், ஐபோன் 16 சீரிஸ் முந்தைய ஐபோன் 15 தொடரின் விலையைப் போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Apple வாட்ச் சீரிஸ் 10 விலை?

அதிகாரப்பூர்வ விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முந்தைய எடிஷன்களுடன் ஒத்துப்போகும் அடிப்படை மாடலுக்கு, சீரிஸ் 10 தோராயமாக $399 (ரூ.33,500)இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சிக்கும் பிறகு விரைவில் முன்பதிவு திறக்கப்படும்.  டெலிவரிகள் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget