PVC Aadhaar Card: உங்கள் ஆதார் எளிதில் கிழிந்துவிடுகிறதா? நீண்டகாலம் உழைக்கும் பிவிசி ஆதார் கார்டை பெறுவது எப்படி...
பிவிசி ஆதார் கார்டு நீண்ட நாட்களுக்கு பாதிப்புக்கு உள்ளாமல் இருப்பதால், அதை பெற்றுக்கொள்வது சிறப்பாகும்.
இந்தியாவில் ஆதார் கார்டு முறை நடைமுறைக்கு வந்தபிறகு, அதன் பயன்பாடு பல இடங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. எங்கெல்லாம் அதிகாரப்பூர்வ அடையாள சான்றிதழ் கேட்கப்படுகிறதோ, அந்த இடங்கலில் எல்லாம் ஆதார் கார்டை உபயோகித்த் கொள்ளலாம் என அர்சாங்கமும் அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக வங்கிகள், கல்லூரிகள், போட்டி தேர்வு, ரயில் பயணம் உள்ளிட்ட அடையாள சரிபார்ப்பு இடஙகளில் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஆதார் கார்டானது பெரும்பாலானோர், காகித அட்டை வடிவில் வகையில் பயன்படுத்தி வருகின்றன்ர். இது சில காலங்களிலேயே பாதிப்புக்கு உள்ளாகி விடுகிறது. அதனால் மீண்டும் புதிய ஆதார் கார்டை பிரிண்ட் எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
இதை போக்கும் வகையில், அரசானது பிவிசி அமைப்பு வடிவிலான கார்டு முறையை அறிமுகம் செய்துள்ளது. இது நீடித்து உழைக்கும் தன்மை இருப்பதால், நீண்ட காலத்துக்கு வைத்து கொள்ளலாம்.
பிவிசி கார்டை எப்படி பெறுவது என்பது எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
முதலில் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தைப் பார்வையிடவும்.
பின்னர் Order Aadhaar PVC Card என்பதைக் கிளிக் செய்யவும்
இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்னை உள்ளிடவும்
இதையடுத்து Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் பதிவு செய்யப்படவில்லை என்றால், 'எனது மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் OTP ஐ உள்ளீடு செய்யவும்.
உறுதிசெய்த பிறகு, Make Payment என்பதைக் கிளிக் செய்து 50 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவும்.
அவ்வளவுதான். 5 நாட்களுக்குள் உங்கள் வீட்டுக்கே PVC ஆதார் அட்டையைப் வந்துவிடும்.