Cat Eye Glasses: பூனை கண் கண்ணாடியை வடிவமைத்த அல்டினா ஷினாசி... யார் இந்த ஆளுமை? சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்...!
அல்டினா ஷினாசியின் (Altina Schinasi) 116வது பிறந்தநாளுக்காக இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Cat Eye Glasses: அல்டினா ஷினாசியின் (Altina Schinasi) 116வது பிறந்தநாளுக்காக இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
யார் இந்த அல்டினா ஷினாசி?
1970ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர் அல்டினா ஷினாசி. இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்டனர். புகழ்பெற்ற கலைஞர்களான ஹான்ஸ் ஹாஃப்மேன் மற்றும் மோரிஸ் கான்டர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நியூயார்க்கின் பல்கலைக்கழக்கதில் பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்க கைவினைக் கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இவர், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கலை பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், டிசைனர் என்ற பன்முகத் திறமைகளை கொண்டவர். பெண்கள் விரும்பி அணியும் கேட்-ஐ கண்ணாடியை வடிவமைத்தவர். இது தவிர, ஏராளமான ஆவணப்படங்களையும், பல்வேறு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர் அல்டினா. மேலும், புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.
மேலும், பாரிஸில் ஓவியக் கலை பயின்ற அல்டினா, அமெரிக்காவுக்கு திரும்பினார். அப்போது, நியூயார்க்கில் உள்ள பல்வேறு கடைகளில் ஜன்னல் அலங்காரம் செய்பவராக பணியாற்றினார். இந்த வேலையில், இருந்தபோது பெண்களுக்கு வட்டமான வடிவில் மட்டுமே கண்ணாடி இருப்பதை கண்டறிந்த அவர், கேட்-ஐ வடிவ ஃபிரேமே உருவாக்கினார். இது ஹார்லிகுயின் (Harlequin) ஃபிரேம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
விருதுகளை குவித்த அல்டினா:
கேட்-ஐ கண்ணாடி ஆரம்பத்தில் சந்தையில் பிரபலம் அடையவில்லை. பின்னர், சில மாதங்களிலே கேட்-ஐ கண்ணாடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நியூயார்க் முழுவதும் பிரபலமடைந்தது. 1930ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1940ஆம் ஆண்டுகளில் இந்த கேட்-ஐ ஃப்ரேம் கண்ணாடிகள் அமெரிக்காவின் ஃபேஷன் அடையாளமாக மாறியது. இன்றைக்கு கூட இதனை பெண்கள் விரும்பி அணிந்து வருகின்றனர். இந்த கேட்-ஐ கண்ணாடி பிரபலமடைந்ததை அடுத்து, 1939ஆம் ஆண்டு அமெரிக்க டிசைன் விருது பெற்றார் அல்டினா.
இதனை தொடர்ந்து , அவர் திரைப்படங்களிலும் நடித்தார். அவருக்கு ஓவியம் கற்றுக் கொடுத்து ஆசிரியர் ஜார்ஜ் க்ரோஸ்ப் பற்றி ஒரு ஆவணப்படத்தை தயாரித்தார். இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிதுரைக்கப்பட்டு, வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கூகுள் டூடுல்:
வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், கேட்-ஐ கண்ணாடியை வடிவமைத்த அல்டினா ஷினாசியின் (Altina Schinasi) 116வது பிறந்தநாளுக்காக இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.