Apple iPod Discontinued: காலம் முடிஞ்சுது.. இனி உற்பத்தி இல்லை.. ஐ பாட் தயாரிப்பை திடீரென நிறுத்தும் ஆப்பிள்!
சார்ஜிங் வகையில் வாக் மேனின் வேற லெவல் அப்டேட்டாக கலர் கலராக வந்தது ஆப்பிளின் ஐபாட்.
இசையை செல்லும் இடமெல்லாம் காதோடு கேட்டு ரசிக்க கண்டுபிடிக்கப்பட்ட வாக்மேன். காதில் ஹெட்போனை போட்டுக்கொண்டு கேசட்டை வாக்மேனில் போட்டுக்கொண்டே பாட்டு கேட்டுக்கொண்டே செல்லலாம். அதெல்லாம் அந்தக்காலம். அதன்பின்னர் வந்தது ஐபாட். குறிப்பாக ஆப்பிள் கொண்டு வந்த ஐபாட் பெரிய அளவில் ரீச் ஆனது. 2001ம் ஆண்டு அக்டோபரில் ஆப்பிள் தன்னுடைய தயாரிப்பான mp3 பிளேயர் ஐபாடை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபாடை அறிமுகம் செய்தார். உள்ளங்கையிக்குள் அடக்கி வைத்துக்கொள்ளும் தீப்பெட்டி சைஸ் பெட்டிக்குள் 1000 பாடலுக்கு மேல் சேவ் செய்து வைத்துக்கொள்ள முடியும். அதற்கு ஏற்ப குவாலிட்டியான மியூசிக் கொடுக்கும் ஹெட்போன்களும் கொடுக்கப்பட்டன.
சார்ஜிங் வகையில் வாக் மேனின் வேற லெவல் அப்டேட்டாக கலர் கலராக வந்தது ஆப்பிளின் ஐபாட். இசை உலகில் அடுத்தப்புரட்சியாக வந்த ஐபாட் தற்போது முடிவுரையை எழுதியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் mp3 பிளேயர் ஐபாடின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தற்போது அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐபாட் உற்பத்தியை நிறுத்துகிறது ஆப்பிள். தற்போது சந்தையில் இருக்கும் ஐபாட் மட்டுமே விற்பனையாகும் என்றும் இதற்கு மேல் உற்பத்தி இல்லை எனவும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.
இசை உலகு தற்போது வேற லெவல் அப்டேட்டில் சென்றுகொண்டிருக்கிறது. அமேசான், ஸ்பாட்டிபை என தோன்றும் நேரத்திலெல்லாம் பாட்டு கேட்க முடியும் என்பதும் ஐபாடின் ஆயுள் அவ்வளவுதான் என்பதையும் ஆப்பிள் உணர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளது. அதேவேளையில் இது குறித்து குறிப்பிட்டுள்ள ஆப்பிள், இசை சேவையை வழங்கிய ஐபாட் முடிவுக்கு வருகிறது. ஆனாலும் இசையின் அடுத்தடுத்த அப்டேட்டை ஆப்பிள் அறிமுகம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்துக்கான புது டிவைசை விரைவில் ஆப்பிள் கொண்டு வரலாம் என கணிக்கப்படுகிறது.
முன்னதாக, செல்போனைத் துடைக்கக் கூட பிரத்யேக துணியை அறிமுகம் செய்து அலப்பறை செய்தது ஆப்பிள். Polishing cloth என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் துணியே இந்தத் தயாரிப்பு. மிருதுவான, சிராய்ப்புகளை ஏற்படுத்தாத பொருள்களால் இந்தத் துணி உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் துணி ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. எனினும் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 1900 ரூபாய். ஏன் இவ்வளவு ரேட் எனக் கேட்டால், ஆப்பிள் வெளியிட்டிருக்கும் பாலிஷிங் துணியின் ஓரத்தில் இந்நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான்.
அதேபோல, சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்தது. காரணம் பெரும்பாலான உடல் உபாதைகள் சரியாக தண்ணீர் குடிக்காததாலேயே வந்துவிடுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை வாங்கி வைத்துக் கொண்டால் அது நம் உடலின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்க வேண்டிய இடத்தில் அலர்ட் கொடுத்து குடிக்க வைக்கும். ஹைட்ரேட் ஸ்பார்க் HidrateSpark என்ற இந்த தண்ணீர் பாட்டில்கள் இரு மாடல்களில் வருகின்றன. HidrateSpark Pro மற்றும் HidrateSpark Pro STEEL என்று வருகின்றன. முதலாவது பாட்டிலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 4594. இரண்டாவது பாட்டிலின் விலை ரூ,6126. ஆனாலும் இது இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை.