Amazon Mobile Savings Days: 4 நாட்கள் தான்.. செல்போன்களுக்கு அமேசான் கொடுக்கும் அசத்தல் ஆஃபர்கள்!
வாடிக்கையாளர்களை எப்போதும் தங்கள் பக்கம் இழுத்து வைத்துக்கொள்ள பல ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்.
மக்களின் ஷாப்பிங் உலகம் தற்போது ஆன்லைனுக்குள் சுருங்கிவிட்டது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களையும் சென்று சேரத்தொடங்கிவிட்டன. வகைவகையான பொருட்கள், அதிக தள்ளுபடி, வீடுகளுக்கே பொருள் வந்து சேரும் முறை என ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு ரசிகர்கள் கூடியதற்கு பல காரணங்கள் உண்டு. போலியான பொருட்கள் வருவது, செங்கல்லை வைத்து அனுப்புவது என ஆன்லைன் உலகம் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. ஆனால் வாடிக்கையாளர்களை எப்போதும் தங்கள் பக்கம் இழுத்து வைத்துக்கொள்ள பல ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்.
சமீபத்தில் அமேசான், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அறிவித்தது. அதன்பின் சுதந்திர தினம் ஆஃபரும் கொடுக்கப்பட்டது. இப்போது 'அமேசான் மொபைல் சேவிங்க்ஸ் டேஸ் சேல்' என்ற தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது அமேசான். இந்த தள்ளுபடி விற்பனை முழுக்க முழுக்க செல்போன் மற்றும் செல்போன் சார்ந்த பொருட்களுக்கானது. அதன்படி, இந்த தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 19 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவணை முறை, எக்ஸேன்ச் என பல வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிமட்டுமின்றி குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனி சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சிட்டி வங்கி, IndusInd 2 வாடிக்கையாளர்கள் டெபிட் கார்ட் அல்லது தவணை முறையில் செல்போன் வாங்கினால் 10% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்றால் மேலும் பல ஆஃபர்களும் உண்டு.
இந்த செல்போன் தள்ளுபடி நாட்கள் ஆகஸ்ட் 19 வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், OnePlus, Xiaomi, Samsung, iQoo, Realme உள்ளிட்ட நிறுவனங்களில் செல்போன்கள் அடங்கும். குறிப்பாக OnePlus 9R, OnePlus Nord 2, OnePlus Nord CE, Redmi Note 10 series, Redmi 9 series, Mi 11X series, Samsung Galaxy M21 2021 Edition, Samsung Galaxy M32 and Samsung Galaxy M31, Realme X7, iQoo 7 series, and iQoo Z3 ஆகிய மாடல்களுக்கு பல தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அமேசான் கிரேட் ஃப்ரீடம் பெஸ்டிவல் 2021 அதிரடி ஆஃபர்களை அறிவித்தது. இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை அறிவித்தது. அமேசான் ப்ரைம் டே ஆஃபர்களை விட ஃப்ரீடம் சேல் ஆஃபர்கள் சிறந்த ஒன்றாக இருந்தது. ஏனெனில் ப்ரைம் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இந்த ப்ரீடம் சேலில் பொருட்களை வாங்கி குவிக்கலாம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ப்ளூடுத் ஹெட்ஃபோன், இயர்ஃபோன் என ஆஃபர்களால் திக்குமுக்காட வைத்தது அமேசான்.