மேலும் அறிய

Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?

Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள், ஒரே மாதிரியான ரீசார்ஜ் கட்டணத்தில் முற்றிலும் வித்தியாசமான பலன்களை வழங்குவது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில், எதன் பலன் சிறப்பானது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் Vs ஜியோ Vs வோடாஃபோன் ரீசார்ஜ்:

நமது வேகமான வாழ்க்கையில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமான கருவியாக மாறிவிட்டது. அதற்கு ஒவ்வொரு மாதமும் நமது பட்ஜெட்டில் இருந்து பணத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்காக நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின், ரீசார்ஜ் திட்டத்தில் எதை தேர்வு செய்யலாம் என்பதில் எப்போதும் பெருங்குழப்பம் நிலவுகிறது. காரணம் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களுமே ஒரே மாதிரியான கட்டண வரம்பை கொண்டுள்ளன. 

ஆனால், அவற்றில் வித்தியாசமான பலன்கள் கிடைக்கின்றன என்பதையே நம்மில் பலர் முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை. சில நிறுவனங்கள் ஒடிடி அணுகலையும், சில நிறுவனங்கள் இரவு நேர டேட்டா சேவையும் வழங்க சில நிறுவனங்கள் எளிமையான அழைப்பு மறும் இணைய சேவையை மட்டுமே வழங்குகின்றன. எனவே ஒரு மாதத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருந்தால், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களின் ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தின் முழு பலன்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்து அறியுங்கள்.

ஏர்டெல்லின் ரூ.349-க்கான ரீசார்ஜ் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-க்கான திட்டம் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ இலவசமாக அனுப்பும் வசதி கிடைக்கும். நீங்கள் 5G பகுதியில் வசித்து 5G தொலைபேசி வைத்திருந்தால், உங்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவும் கிடைக்கும். நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையும் இசையைக் கேட்பதையும் விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சரியான தேர்வாக இருக்கும். காரணம்,

  • ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22+ OTT செயலிகளுக்கான அணுகல்)
  • ஆப்பிள் மியூசிக்கின் 6 மாத அணுகல்
  • 1 வருடத்திற்கு Perplexity Pro அணுகல்
  • விங்க் மியூசிக் பிரீமியம் அனுகல் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த விலை வரம்பில் ஏர்டெல் அதிக பொழுதுபோக்கு பலன்களை வழங்குகிறது.

ஜியோ ரூ.299 & ரூ.329 திட்ட பலன்கள்:

ஜியோவின் ரூ.299-க்கான திட்டம் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ இலவசமாக அனுப்பலாம். ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலையும் பெறுவீர்கள். 5ஜி பகுதியில் உங்களிடம் 5ஜி போன் இருந்தால், இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெறுவீர்கள்.

  • ரூ.329 ஜியோ திட்டமும் அதேதான், ஆனால் விளம்பரமில்லா இசைக்காக ஜியோசாவ்ன் ப்ரோவிற்கான அணுகலை வழங்குகிறது
  • உங்கள் தினசரி டேட்டா முடிந்ததும், இணையம் மிகவும் மெதுவாக (64 Kbps) மாறும்.

Vi ரூ.349 திட்டப் பலன்கள்:

Vi திட்டம் படைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உணர்கிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ கடுமையான டேட்டா வரம்பைக் கொண்டிருந்தாலும், Vi உங்களுக்கு 1.5GB/நாள், வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS/நாள் வழங்குவது மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளையும் அள்ளி வீசுகிறது.

  • நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி அன்லிமிடெட் டேட்டா
  • வார இறுதி டேட்டா மாற்றம் (வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை சேர்த்து வைத்து வார இறுதியில் பயன்படுத்தலாம்)
  • டேட்டா பேக்-அப் (மாதம் 2 ஜிபி கூடுதலாக)
  • தகுதியுள்ள பயனர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டா

ஏர்டெல் vs ஜியோ vs Vi - யாருக்கு எது பெஸ்ட்?

  • நீங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதோடு, இசையையும் அதிகளவில் கேட்பவராக இருந்தால் ஏர்டெல்லின் ரூ.349 திட்டம் தான் சிறந்தது.
  • 5G உடன் ஒரு எளிய திட்டத்தை தேர்வு செய்ய விரும்பினால், ஜியோவின் ரூ.299 திட்டம் சிறந்தது
  • அதிக டேட்டாவை குறிப்பாக இரவில் பயன்படுத்துபவராக இருந்தால் Vi ரூ.349 சிறந்தது

விலையை மட்டுமல்ல, உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எப்போதும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது பல்வேறு வகையிலும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget