மேலும் அறிய

Airtel | இவ்வளவு சேவைகள்..ஆனால் ஒரே கட்டணம் ! ஏர்டெல்லின் புதிய ப்ளான் பற்றித் தெரியுமா?

தனித்தனி சேவைகளுக்கு தனித்தனி கட்டணம் செலுத்திய சூழலில் ஒரே திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Airtel Black திட்டத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அசத்தலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனது போஸ்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஆல் இன் ஒன் என்ற வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பயனாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட  புதிய திட்டத்திற்கு “Airtel Black ” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே திட்டத்தின் மூலம்  போஸ்ட்பெயிட், டி.டி.ஹெச். மற்றும் பைபர் சேவைகளுக்கு பொதுவான கட்டணத்தை செலுத்திக்கொள்ள முடியும். இந்த புதிய திட்டத்தின் துவக்க விலை 998 ரூபாய் ஆகும். இதனை பெறுவதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்புக்கொண்டு, எந்தெந்த சேவையை பெற விரும்புகிறோமோ அதனை குறிப்பிட வேண்டும். தனித்தனி சேவைகளுக்கு தனித்தனி கட்டணம் செலுத்திய சூழலில் ஒரே திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Airtel Black  திட்டத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.

Airtel | இவ்வளவு சேவைகள்..ஆனால் ஒரே கட்டணம் ! ஏர்டெல்லின் புதிய ப்ளான் பற்றித் தெரியுமா?

கட்டண விவரங்கள் :

இந்த சேவை ரூ 998 முதல் 2,099 ரூபாய் வரையில் கிடைக்கிறது. டி.டி.ஹெச் மற்றும் 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பு ஆகிய இரண்டு சேவைகளுக்கு  மாதம் ரூ. 998, இதுவே இதன் தொடக்க விலையாகும். அடுத்ததாக டி.டி.ஹெச் கனெக்ஷன் மற்றும் 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,349  செலுத்த வேண்டும்.இதேபோல பைபர் கனெக்ஷன் மற்றும் 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,598 செலுத்திக்கொள்ளலாம். பைபர், டி.டி.ஹெச் கனெக்ஷன் மற்றும் 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 2,099 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Airtel | இவ்வளவு சேவைகள்..ஆனால் ஒரே கட்டணம் ! ஏர்டெல்லின் புதிய ப்ளான் பற்றித் தெரியுமா?
சமீக காலமாக  ஏர்டெல்லின்  சில ரீச்சார்ஜ் திட்டங்கள் மறைவு  மற்றும் சிக்னல் பிரச்சனைகள் காரணமாக  பயனாளர்கள் மத்தியில் அதிருப்தி என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தது ஏர்டெல்.  இந்நிலையில் புது பயனாளர்களை இணைக்கவும் , முன்பே இருக்கும் பயனாளர்களை குஷிப்படுத்தவும் பல அட்டகாசமான திட்டங்களை ஏர்டெல் தொடர்ந்து தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தAirtel Black  திட்டம் பயனாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தினை பெற ஏர்டெல் ஆப்பினை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள Airtel Black  திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அப்படியில்லை என்றால்  உங்களிடம் இருக்கும் சேவைகளை தொகுப்பதன் மூலம், உங்கள் சொந்த திட்டத்தையும் நீங்கள் உருவாக்கி வாடிக்கையாளர் மையத்தை தொடர்புகொண்டு சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இந்த திட்டம் குறித்த  விவரங்களை பெறலாம். இது தவிர 8826655555 எண் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்புகொண்டால் Airtel Black  குறித்த  விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டம் ஏர்டெல் ப்ரீபெயிட் இணைப்புகளுக்கு பொருந்தாது.

தலைப்பு செய்திகள்

ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget