WTC 2021 | DAY 3 LIVE : முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!
முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் பாதித்தது. இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் கால தாமதமாக 3.30 மணி அளவில் தொடங்கியது.
LIVE
Background
2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, துணை கேப்டன் ரஹானே இருவரும் களத்தில் நிற்க இந்திய அணியின் ஸ்கோர் 146/3. காலை முதல் பெய்த மழையால் சவுதாம்ப்டன் மைதானம் ஈரப்பதத்துடன் காட்சியளித்தது, இதனால் திட்டமிட்டபடி 3 மணி அளவில் போட்டியை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஆலோசனையில் ஈடுபட்ட நடுவர்கள், மைதானத்தில் ஆய்வு செய்து 3.30 மணி அளவில் போட்டியை துவங்கினர்.
70/1 - முதல் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்!
நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின். உள்ளே வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
தேநீர் இடைவெளி - நியூசிலாந்து 36/0
நியூசிலாந்து அணி மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 21 ஓவர்கள் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை சேர்த்துள்ளது.
டாம் லாதம் - 17 (70)
டேவான் கான்வே - 18 (56)
19/0 - நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
முதல் விக்கெட் வீழ்த்த இந்திய அணி கடும் முயற்சி. 10 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
டாம் லாதம் - 11 (41)
டேவான் கான்வே - 8 (30)
முதல் இன்னிங்ஸ் - 217 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!
92.1 ஓவரில் ஆல் அவுட் ஆன இந்திய அணி. போல்ட் வீசிய பந்தில் 15 ரன்கள் அடித்திருந்த ஜடேஜா அட்டமிழந்தார். இந்திய அணி பேட்ஸ்மேன் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை, ரஹானே அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார்.
5 விக்கெட்களை கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன்!
இரண்டு பந்துகளில், இரண்டு விக்கெட்! 91வது ஓவரின் 4வது பந்தில் இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பும்ராவை விக்கெட் எடுத்தார் ஜேமிசன்.