World Athletics Championships: ஆசியளவில் முதலிடம்.. உலகளவில் இரண்டாமிடம்.. ரிலேவில் அதிவேகமாக கடந்து இறுதிக்கு முன்னேறிய இந்தியா!
இந்தியாவின் ஆண்கள் 4x400 ரிலே அணி புதிய வரலாற்றை படைத்து உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவின் ஆண்கள் 4x400 ரிலே அணி புதிய வரலாற்றை படைத்து உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சனிக்கிழமையன்று, (நேற்று) உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்தியா புதிய சாதனை:
இதில் பங்கேற்ற இந்திய அணி பந்தயத்தை 2 நிமிடம் 59.05 வினாடிகளில் நிறைவு செய்தது. இது ஆசிய வரலாற்றை பொறுத்தவரை புதிய ரெக்கார்ட் ஆகும். இந்திய ரிலே அணியில் முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப், முகமது அனஸ் யாஹியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
நேற்று நடந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியாவை விட அமெரிக்காவை சேர்ந்த ரிலே அணி மட்டுமே முன்னிலையில் இருந்தது. அமெரிக்காவின் ரிலே அணி பந்தயத்தை 2 நிமிடம் 58.47 வினாடிகளில் நிறைவு செய்தது. தற்போது இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் இந்தியாவின் ரிலே அணி ஆசியாவில் அதிவேக அணியாக உருவெடுத்தது.
Who saw this coming 😳
— World Athletics (@WorldAthletics) August 26, 2023
India punches its ticket to the men's 4x400m final with a huge Asian record of 2:59.05 👀#WorldAthleticsChamps pic.twitter.com/fZ9lBqoZ4h
இந்தியாவுக்கு முன், ஆசிய அணிகளில் அதிவேக ரிலே அணி என்ற சாதனையை ஜப்பான் 2 நிமிடம் 59.51 வினாடிகளில் முடித்தது. முன்னதாக, 2020 ஒலிம்பிக்கில் இதே இந்திய அணி (முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப் மற்றும் முகமது அனஸ் யாஹியா) 3 நிமிடம் 00.25 வினாடிகளில் ஓடி இலக்கை எட்டியது. அப்போது இந்திய அணி இறுதிப்போட்டியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
பந்தயத்தில் இந்தியா மெதுவாகத் தொடங்கியது
போட்டியின் தொடக்கத்தில் இந்திய ரிலே அணி மெதுவான தொடக்கத்துடன் ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக, மொஹமட் அனஸ் யாஹியா மெதுவாக ஓட தொடங்கினார். முதல் சுற்றுக்குப் பிறகு இந்தியா ஆறாவது இடத்தில் இருந்தது. இதன்பின் அமோஜ் ஜேக்கப் அணியின் வேகத்தை அதிகரித்து இந்தியாவை 2வது இடத்திற்கு கொண்டு சென்றார். இதன்பிறகு, முகமது அஜ்மல் வரியத்தொடி மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தங்களது சிறப்பான வேகத்தால் கடைசி இரண்டு நிலைகளிலும் இந்தியாவை முதலிடத்தை தக்கவைத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன் மூலம், சரித்திரம் படைத்து, இந்திய ரிலே அணி முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.