World Athletics Championships 2022: தேவை 83.50 மீட்டர்.. வீசியது 88.39 மீட்டர்! ஒரே த்ரோவில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நீரஜ்!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பங்கேற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பதக்கம் வெல்லுவார் என்று அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் 83.50 மீட்டர் தூரம் வீசினால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்று இருந்தது. இதில் முதலாவது வீரராக ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். அத்துடன் ஒரே த்ரோவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.55 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.
Neeraj Chopra has qualified for the World Championships Final with a throw of 88.39m!!
— The Bridge (@the_bridge_in) July 22, 2022
Much like the Tokyo Olympics, it took the Indian just one attempt in qualification to make it through😍 pic.twitter.com/7usgQizZS2
முன்னதாக நேற்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றதால் அனு ராணிக்கு கடும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில் அன்னு ராணி தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். அடுத்து தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் 55.35 மீட்டர் தூரம் வீசினார். இதன்காரணமாக கடைசி வாய்ப்பில் அவர் 60 மீட்டருக்கு அருகே வீசினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அன்னு ராணி 8வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் 2வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி முன்னேறி அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்