Untold Stories Episode 13 : வாழ்வை முடக்கிய விபத்து..! துப்பாக்கித் தந்த புதுவாழ்வு..! அக்னிப்பறவையாய் மாறிய அவனிலேகரா..!
விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
நம்ம எல்லாருக்கும் இருக்குற தன்னம்பிக்கையை விட விளையாட்டு வீரர்களுக்கு இருக்குற தன்னம்பிக்கையும், அவங்க கொடுக்குற கம்பேக்கும் எப்பவுமே அசாத்தியமானதுதான்.. அதுவும் மாற்றுத்திறனாளியா இருந்துகிட்டு சாதிக்குறது அப்படிங்குறது நம்ம எல்லாரும் வாழ்க்கையில அப்படி என்ன கஷ்டத்தை அனுபவிச்சுட்டோம்னு நமக்குள்ள ஒரு கேள்வியை கேட்க வைச்சுடும்.
2001ம் வருஷம் நவம்பர் 8-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்ல பிறந்தவங்க அவனி லேகரா. இந்த பொண்ணுதான் இந்தியாவோட தங்கமங்கை அப்படிங்குறது நிச்சயமா அவங்க அப்பா, அம்மாவுக்கு அப்போ தெரிஞ்சுடாது.. ஒவ்வொரு சகாப்தமும் ஒரு மறக்க முடியாத இழப்புக்கு அப்புறம்தான் தொடங்கும்னு வரலாறு சொல்லிருக்கு..
அந்த மாதிரிதான் அவனி லேகராவோட சகாப்தமும் ஒரு பேரிழப்புக்கு அப்புறம்தான் தொடங்குனுச்சு.. அவனிக்கு ஒரு 11 வயசு இருந்தப்ப அவங்க போன கார் விபத்திற்குள்ளாகியது... இந்த விபத்துனால அவனியோட முதுகெலும்புல பலமாக அடிபட்டுச்சு.. அதுமட்டுமில்லா ஓடி, ஆடி விளையாடுன அவனி 11 வயசுலயே வீல் சேர்ல வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிட்டாங்க..
துறு, துறுனு விளையாடிகிட்டு இருந்த பொண்ணு வீட்டுக்குள்ளயே முடங்கி கிடந்தா அந்த பொண்ணோட மனசுல எந்தளவுக்கு வலி இருந்துருக்கும் அப்படிங்குறது அவனி மாதிரி இருக்கவங்களுக்கு மட்டும்தான் புரியும்.. அந்த விபத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 6 மாசம் அவனி படுத்த படுக்கையாவே இருந்தாங்க..
அப்போ ஒரு நாள் அவனிக்கு இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கம் வாங்குன அபினவ் பிந்த்ராவோட வாழ்க்கை வரலாறான “ A Shot At History” புத்தகத்தை படிச்சுருக்காங்க.. அந்த புக்கை படிச்சபிறகு அவனிக்கு ஒரு புது தன்னம்பிக்கை வந்துருக்கு..
அவனியோட அப்பா பிரவீன் லேகரா அவனிக்கு வில்வித்தையிலும், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கும் கூப்பிட்டு போனாரு.. அவனியோட மனசு முழுக்க துப்பாக்கி மேலயே இருந்துச்சு.. இதுனால தன்னோட வீல் சேர்ல உக்காந்துகிட்டே துப்பாக்கி சுடுதல் போட்டியில கவனம் செலுத்துனாங்க.. துப்பாக்கிச்சுடுதல்ல தீவிர கவனம் செலுத்துன அவனி தன்னோட 14வயது வயசுல அதாவது 2015ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தோட state level championship துப்பாக்கிச் சுடும் போட்டியில பங்கேற்றாங்க.. 14 வயசு சின்னப் பொன்னு அவனி அந்த போட்டியில தங்கப்பதக்கத்தை ஜெயிச்சு அசத்துனாங்க…அந்த தங்கம்தான் அவங்களை ஒலிம்பிக் தங்கம் வரை கொண்டு போறதுக்கான முதல்படியா அமைஞ்சது..
2016ல இருந்து 2020 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 5 தங்கப்பதக்கங்களை அடுத்தடுத்து ஜெயிச்சாங்க.. பாரா துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பையிலும் வெள்ளிப்பத்தக்கத்தை ஜெயிச்சாங்க.. இப்டி எங்க போனாலும் தங்கம், வெள்ளினு ஜெயிச்சுகிட்டு வந்த அவனிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுல நடந்த பாராலிம்பிக் போட்டியில விளையாட வாய்ப்பு கிடைச்சது..
போன வருஷம் நடந்த பாராலிம்பிக் போட்டியில 10 meter Air Rifle பிரிவுல தங்கப்பதக்கத்தை ஜெயிச்சு இந்தியாவையே திரும்பிப் பாக்க வச்சாங்க… பாராலிம்பிக்குல தங்கம் வாங்குன முதல் இந்திய பெண் அப்படிங்குற தவிர்க்க முடியாத சாதனையை தன்னோட 19 வயசுலயே பண்ணி இந்தியாவுக்கே பெருமையை தேடித்தந்தாங்க.. அதே ஒலிம்பிக்ல 50 மீட்டர் ரைபிள் பிரிவுல வெண்கலப் பதக்கம் ஜெயிச்சும் அசத்துனாங்க… ஒரே பாராலிம்பிக்ல இரண்டு பதக்கம் வாங்குன முதல் இந்தியர் அப்படிங்குற வரலாற்றுச் சாதனையையும் அவனி படைச்சு ஒட்டுமொத்த இந்தியாவையுமே தன்னைப் பத்தி பேச வச்சுட்டாங்க..
இந்த வெற்றியும், பாராட்டும் அவனிக்கு அவ்வளோ ஈசியா கிடைக்கல… விபத்துக்கு அப்புறம் தன்னோட வாழ்க்கை எப்படி இருந்துச்சுங்குறதை அவனி எப்படி சொன்னாங்க தெரியுமா..? “ இது எல்லாமே ஒரு கனவுதான்னு நினைச்சுக்குவேன்..
ஒவ்வொரு நாளும் தூங்கி எந்திரிக்குறப்ப எல்லாம் சரியாகி நார்மல் ஆகிடும்னு நினைச்சுக்குவேன்.. ஒரு குழந்தையா இருந்த எனக்கு எல்லாமே வித்தியாசமா, புதுசா இருந்துச்சு.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. என்னோட உணர்வுகள் சமமாவே இல்லாம போயிடுச்சு… மெல்ல, மெல்ல நான் திரும்ப வந்தேன்.” அப்படினு அவங்க வலியை அவனி சொல்றப்ப அவங்க அவங்க எப்படிப்பட்ட கம்பேக்கை கொடுத்திருக்காங்கனு நாம தெரிஞ்சுக்கனும்… அவனியோட தன்னம்பிக்கை பெண்களுக்கு மட்டுமில்ல ஒவ்வொரு ஆணுக்குமே மிகப்பெரிய பாடம்தான்…
மேலும் படிக்க : Untold Stories Episode 12 : ஓட்டு வீடு முதல் ஒலிம்பிக் வரை..! இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டனின் அசாத்திய பயணம்..!
மேலும் படிக்க : Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?