Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: வெற்றிக்காக தொடரும் தமிழ் தலைவாஸின் போராட்டம் மீண்டும் வீண்; புனேரி வெற்றி
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
LIVE
Background
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்டன் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.
புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்:
கடந்த 3ம் தேதி உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு புனேரி பல்டன் அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. உபி யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனேரி பல்டன் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது புரோ கபடி லீக் சீசன் 10ன் புனேரி பல்டன் அணியின் எட்டாவது வெற்றியாகும்.
மறுபுறம், தமிழ் தலைவாஸ் அணி கடந்த டிசம்பர் 31ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 37-38 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.
புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் புனேரி பல்டன் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில், தமிழ் தலைவாஸுக்கு எதிரான 4 வெற்றிகளுடன், புனேரி பல்டன் அணி முன்னிலையில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 3 முறை வென்றுள்ள நிலையில், 2 போட்டிகள் டையில் முடிந்தது.
கடைசியாக சீசன் 9ல் புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் ஆட்டத்தில் 39-37 என்ற கணக்கில் புனேரி பல்டன் அணி வெற்றி பெற்றது.
8 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன், புனேரி பல்டன் 41 புள்ளிகளுடன் ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மறுபுறம், தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் மொத்தமாகவே 13 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்
புனேரி பல்டன்
ப்ரோ கபடி லீக்கில் இந்த 10வது சீசனில் புனேரி பல்டான் அணிக்காக மோஹித் கோயட் 9 போட்டிகளில் 65 ரெய்டு புள்ளிகளை குவித்து சிறந்த ரைடராக ஜொலிக்கிறார். இவர் உபி யோதாஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் 4 ரெய்டு புள்ளிகளை எடுத்தார்.
இதற்கிடையில், புனேரி பல்டன் அணிக்காக ப்ரோ கபடி லீக் 10 இல் 9 போட்டிகளில் 29 டிபென்ஸ் புள்ளிகள் பெற்ற அபினேஷ் நடராஜன் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதேபோல், இதே அணியை சேர்ந்த அஸ்லாம் இனாம்தார் இதுவரை 71 புள்ளிகள் குவித்து அணியில் முதலிடத்தில் உள்ளார்.
தமிழ் தலைவாஸ்
தமிழ் தலைவாஸைப் பொறுத்தவரை அஜிங்க்யா பவார் முக்கிய ரெய்டராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 9 போட்டிகளில் 63 ரெய்டு புள்ளிகளை அள்ளியுள்ளார். இதில் 9 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகளும் அடங்கும்.
சாஹில் குலியா தமிழ் தலைவாஸ் அணிக்காக டிபென்ஸ் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 9 போட்டிகளில் 33 டிபென்ஸ் புள்ளிகளை எடுத்துள்ளார். அதேசமயம், ஹிமான்ஷு 5 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார்.
இந்த போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கல்கள்:
தமிழ் தலைவாஸின் அஜிங்க்யா பவார் ப்ரோ கபடி லீக்கில் 400 ரெய்டு புள்ளிகளை எட்ட 7 ரெய்டு புள்ளிகள் தேவையாக உள்ளது.
ப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?
ப்ரோ கபடி சீசன் 10 இலிருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: புனேரி அணி வெற்றி
தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக புனேரி அணி 29- 26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: சூப்பர் டேக்கிளில் அசத்தும் தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி சூப்பர் டேக்கிளில் 2 புள்ளிகள் எடுத்து 23 புள்ளிகள் எடுத்துள்ளது.
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: சூப்பர் டேக்கிள் செய்த தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக சூப்பர் டேக்கிள் செய்து 21 புள்ளிகளுக்கு முன்னேறியுள்ளது.
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: டைம் பாஸ் செய்யும் புனேரி
தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்னிலையில் உள்ள புனேரி அணி டைம் பாஸ் செய்து வருகின்றது.
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: இரண்டாம் பாதி ஆட்டத்தின் பாதி ஆட்டம் முடிந்தது
இரண்டாம் பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் முடிந்துள்ளது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 18 புள்ளிகளும் புனேரி அணி 22 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் உள்ளது.