மேலும் அறிய

கோவில்பட்டியில் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்! பயிற்சி அளிக்கும் இந்திய அணியின் முன்னாள் கோச்!

கோவில்பட்டியில் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் பயிற்சி அளித்து வருகிறார்.

கோவில்பட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் முறையாக கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.

கோவில்பட்டியில் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்! பயிற்சி அளிக்கும் இந்திய அணியின் முன்னாள் கோச்!

ஹாக்கி பயிற்சி முகாம்:

ஹாக்கி விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கு 15 நாள்கள் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

கோவில்பட்டியில் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்! பயிற்சி அளிக்கும் இந்திய அணியின் முன்னாள் கோச்!

இந்திய ஹாக்கி முன்னாள் பயிற்சியாளரின் கோச்சிங்:

இவர்களுக்கு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் முகமது ரியாஸ், ஹாக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார்,ரோஸி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின் முடிவில் கலந்து கொண்டுள்ள வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் முறையாக கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டியில் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்! பயிற்சி அளிக்கும் இந்திய அணியின் முன்னாள் கோச்!

இந்த பயிற்சி முகாம் குறித்து முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர் முகமது ரியாஸ் கூறுகையில், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஹாக்கியை ஊக்குவிக்கும் வகையிலும், வீரர்கள் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வகையிலும் இந்த பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக அதிக வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் ஒரிசாவை விட தமிழகத்திலிருந்து அதிக வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ளது. இது போன்ற பயிற்சி முகாம்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தின் ஹாக்கி மையமாக கோவில்பட்டி உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Reopen: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்- வெளியான தகவல்
TN School Reopen: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்- வெளியான தகவல்
Breaking News LIVE: செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் வாலிபர்  உயிரிழப்பு!
Breaking News LIVE: செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு!
TN Government: முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள்..வேளாண் துறையில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு!
முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள்..வேளாண் துறையில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு!
Theni: வராக நதி ஆற்றில் கடக்கவோ, குளிக்கவோ கூடாது: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Theni: வராக நதி ஆற்றில் கடக்கவோ, குளிக்கவோ கூடாது: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

RCB Troll Memes | உனக்கு டீ கஃப் தான்! ஆடிய ஆட்டம் என்ன! RCB கதறல் memes!Shah Rukh Khan hospitalized | ஷாருக்கானின் தற்போதைய நிலை?தீவிர சிகிச்சை! மருத்துவர் சொல்வது என்ன?RR VS RCB Eliminator Highlights | ஈசாலா கப் போச்சே கதற விட்ட RR கலங்கிய விராட்Savukku Shankar | ’’என்னை யாரும் துன்புறுத்தல’’சவுக்கு சங்கர் பகீர்! அதிரடி திருப்பம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Reopen: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்- வெளியான தகவல்
TN School Reopen: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்- வெளியான தகவல்
Breaking News LIVE: செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் வாலிபர்  உயிரிழப்பு!
Breaking News LIVE: செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு!
TN Government: முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள்..வேளாண் துறையில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு!
முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள்..வேளாண் துறையில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு!
Theni: வராக நதி ஆற்றில் கடக்கவோ, குளிக்கவோ கூடாது: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Theni: வராக நதி ஆற்றில் கடக்கவோ, குளிக்கவோ கூடாது: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Crime: கேஸ் சிலிண்டரில் கசிவு.. தூங்கிக்கொண்டிருந்த  4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கேஸ் சிலிண்டரில் கசிவு.. தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
RTE Lottery Admission: மே 28 தயாராகுங்க! தனியார் பள்ளியிலும் இலவச படிப்பு! ஆனால் குலுக்கல்தான்!
RTE Lottery Admission: மே 28 தயாராகுங்க! தனியார் பள்ளியிலும் இலவச படிப்பு! ஆனால் குலுக்கல்தான்!
Crime: ”உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவேன்”.. மத்திய அரசு ஊழியரிடம் பக்கா ப்ளான் போட்ட பெண் கைது!
”உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவேன்”.. மத்திய அரசு ஊழியரிடம் பக்கா ப்ளான் போட்ட பெண் கைது!
Crime: கணவருடன் ஏற்பட்ட சண்டையால் 4வயது சிறுமி கொலை.. போலீஸ் ரோந்து வாகனம் வந்ததும் தாய் செய்த செயல்..!
கணவருடன் ஏற்பட்ட சண்டையால் 4வயது சிறுமி கொலை.. போலீஸ் ரோந்து வாகனம் வந்ததும் தாய் செய்த செயல்..!
Embed widget