Sathiyan-Manika: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சாதனை இடத்தை பிடித்த சத்யன் - மணிகா பட்ரா ஜோடி
கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சத்யன் ஞானசேகரன் மணிகா ஜோடி சாதனை படைத்துள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரராக வலம் வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன். இவர் ஒற்றையர் தரவரிசையில் 38ஆவது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 2019ஆம் ஆண்டு இவர் 24ஆவது இடம் வரை பிடித்து அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இவர் கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பட்ராவுடன் இணைந்து களமிறங்கினார். ஒலிம்பிக் போட்டியில் இந்த ஜோடி சிறப்பாக செயல்படவில்லை. எனினும் அதன்பின்னர் நடைபெற்று வரும் சர்வதேச தொடர்களில் இந்த ஜோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கலப்பு இரட்டையர் பிரிவிற்கான உலக தரவரிசையில் சத்யன் ஞானசேகரன் மற்றும் மணிகா பட்ரா ஜோடி 7ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இதன்மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் சிறப்பான இடத்தை பெற்ற இந்திய ஜோடி என்ற பெருமையை இந்த ஜோடி பெற்றுள்ளது.
Breaking the Barriers to storm into single digit world ranking.
— Sathiyan Gnanasekaran OLY (@sathiyantt) March 22, 2022
Extremely elated to achieve career best WR 7 along with @manikabatra_TT in Mixed Doubles!
The highest ever world ranking attained by any Indian mixed pair until now.
Onwards & Upwards💪#sathiyantt #tabletennis pic.twitter.com/Cl0rwqkHC3
இவர் தற்போது நடைபெற்று வரும் டபிள்யூ டிடி தோஹா தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதன்காரணமாக அந்தத் தொடரில் சத்யன் -மணிகா ஜோடி பதக்கத்தை உறுதி செய்யுள்ளனர். மேலும் இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசையிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற டபிள்யூடிடி கண்டெண்டர் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் சத்யன் -மணிகா ஜோடி முதல் முறையாக உலக தரவரிசையில் டாப் 20 இடங்களுக்குள் முன்னேறி அசத்தியது. அதன்பின்னர் வேக வேகமாக முன்னேறி தற்போது டாப் -10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்