Sania Mirza : 36 வயதினிலே சானியா மிர்ஸா.. வைரல் ஷேராகும் வொர்க்-அவுட் வீடியோ..
Sania Mirza Weight Loss: மீண்டும் இளமைக்கு திரும்பும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் ஜிம் வொர்க்கவுட் விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
![Sania Mirza : 36 வயதினிலே சானியா மிர்ஸா.. வைரல் ஷேராகும் வொர்க்-அவுட் வீடியோ.. Sania Mirza workout sessions goes Viral She Loses 3 kg in Just 6 Sessions- WATCH VIDEO Sania Mirza : 36 வயதினிலே சானியா மிர்ஸா.. வைரல் ஷேராகும் வொர்க்-அவுட் வீடியோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/4a79a92fed53fe068c3a5b837a01fcb11659526461_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Sania Mirza Weight Loss: மீண்டும் இளமைக்கு திரும்பும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் ஜிம் வொர்க்கவுட் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி , இந்திய அணிக்காக சர்வதேச அளவில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சானியாவின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவரது ஜிம் கோச்சர் யாசர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யாசர் கான் விஐபிகளுக்கு ஜிம் கோச்சராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ குறித்து யாசர் கான் கூறியுள்ளது, சானியாவின் புதிய டென்னிஸ் கோர்ட் ஜிம். அவர் ஜிம்மில் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவர் வெறும் ஆறு பயிற்சி வகுப்புகளிலேயே இரண்டு முதல் மூன்று கிலோ வரை குறைத்துள்ளார். இது அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. இவர் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் இவருக்கு நான் பயிற்சி வகுப்புகளை திட்டமிடுவதே கொஞ்சம் சவாலாகத் தான் இருந்தது. இவரது இந்த அர்பணிப்புக்கான விடை தான் இரண்டு முதல் மூன்று கிலோ வரை எடை குறைந்துள்ளது. சானியா ஜிம்மிற்கு வரும்போதே அனைத்து பயிற்சிக்ளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்ற மனநிலையுடன் வருகிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் யாசர் கான் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராமில் கேம், செட் அண்ட் மேட்ச் என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)