சானியா மிர்ஸாவை ஏமாற்றினாரா சோயப் மாலிக்? விவாகரத்து செய்யப்போவதாக பரவும் தகவல்... சானியா மறைமுகப் பதிவு!
விவாகரத்து பற்றிய வதந்திகள் பரவும் நிலையில், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மறைமுக கருத்து ஒன்றை பகிர்ந்தது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சானியா மிர்ஸா - சோயப் மாலிக்
சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின்படி, இந்த தம்பதிகளுக்கு இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சனை உருவாகி வருவதாக பேசப்படுகிறது. மேலும் அவரது விவாகரத்து பற்றிய வதந்திகளின் ஊகங்களுக்கு மேலும் வலுவை சேர்க்கின்றன. சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மறைமுக கருத்து ஒன்றை பகிர்ந்தது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. அவர் அந்த பதிவில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாஹ்வைக் கண்டுபிடிக்க". என்று எழுதி உள்ளார்.
Sania Mirza Instagram story. pic.twitter.com/BBKEztyCa6
— Avinash Aryan (@AvinashArya09) November 6, 2022
சரியான காரணம் என்ன?
இப்போது வரை, அவர்களின் பிளவு நடந்ததா, அல்லது அதற்கான முகாந்திரம் இருக்கிறதா சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், பாகிஸ்தானில் இருந்து சில ஊடக அறிக்கைகள், சோயிப் மாலிக் சானியாவை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
மகனுக்காக மட்டும் சந்திப்பு
இந்த ஜோடி பிரிந்து சென்று சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஜோடி இப்போது மகன் இஷானை பார்த்துக்கொள்ள மட்டுமே சந்திக்கிறார்கள் என்று வதந்திகள் பரபரப்பாக பேசுகின்றன. ஆனால், இது குறித்து இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை.
View this post on Instagram
View this post on Instagram
திருமண வாழ்க்கை
நட்சத்திரங்கள் பலர் கூட, சானியா மிர்ஸா மற்றும் சோயிப் மாலிக் ஏப்ரல் 2010-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு வயதில் இஷான் மிர்சா மாலிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த ஜோடி சமீபத்தில் தங்கள் மகனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடியது, அதன் படங்களை சோயிப் மாலிக் பகிர்ந்துள்ளார். சானியா மிர்சா பகிரும் முதல் மறைமுகப் பதிவு இதுவல்ல. சில நாட்களுக்கு முன்பு, "கடினமான நாட்களைக் கடந்து செல்லும் தருணங்கள்" என்ற தலைப்புடன் தனது மகனுடன் ஒரு படத்தைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.